(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்சப்னி அஹமட்)
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் பிரதேசத்தின் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அப்பிரதேசத்தில் மக்களுக்கு இடஞ்சலாகவுள்ள இரானுவ முகாம் மற்றும் மண் ஏற்றும் அனுமதிப்பத்திரம் போன்றவற்றினை இரத்துச்செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கிழக்கு மாகான சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
ஒலுவில் பிரதேசத்தின் அஸ்ரப் நகர் கிராம மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்குள்ள இளைஞர்களையும் பள்ளிவாயல் பிரமுகர்களை சந்திக்கும் நிகழ்வு கடந்த 2017.01.06 ஆம் திகதி இடம்பெற்றது அதன் போது கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்;
அஸ்ரப் நகர் கிராமத்தில் மக்கள் படும் பிரச்சினைகள் தொடர்பில் நான் அறிந்தவன் என்றவகையில் அரசியல் அதிகாரம் உள்ள போது என்னால் இப்பிரதேசத்திற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் பெற்றுக்கொடுக்க முன்வருவேன் அது போல் இப்பிரதேசத்தின் முக்கிய பிரச்சினையாக யானை பிரச்சினைள் இருக்கின்றது இது தொடர்பில் நான் விசேட கவனம் செலுத்திவருகின்றதுடன் அன்மையில் இடம்பெற்ற அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் அஸ்ரப் நகர் பிரதேசத்தில் உட்புகும் யானையை உட்புகுவிடாமல் தடுப்பது தொடர்பாகவும் பேசப்பட்டது அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இங்கு குறைந்தளவிளான மக்களே வாழ்கின்றார்கள் ஆனால் அவர்களுக்கான சரியான பொருளாதார வசதிகள் இன்மையினால் பெரும் கஷ்டத்திற்கு உள்வாங்கப்படுகின்றார்கள் என்பதை நான் அறிகின்றேன் அந்த வகையில் இங்கு வாழும் மக்களுக்கும் பெரும் இடைஞ்சலாகவுள்ள மண் அகழும் வேலைகளினால் மக்கள் பெரிதும் சுகாதார பாதிப்புக்காகின்றதுடன் வீதிகளும் பழுதடைந்து வருகின்றது ஆகவே மன் அகழும் திட்டத்திற்கான அனுமதிப்பத்திரத்தினை குறைத்து தடுக்க வேண்டும் என்பதுடன் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இப் பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமில் ஒரு பகுதியில் மரம் நடுதல் எனும் போர்வையில் பெரும்பான்மையினருக்கு காணி வழங்கப்பட்டமையடுத்து, நானுமĮ

Post a Comment