நிந்தவூர் பிரதேச பாடசாலைகளில் நடைபெறும் பகல் கொள்ளைகளும், பச்சோந்தி அதிபர்களின் பணஅறவீடுகளும்.!?!?!?!?

நடவடிக்கை எடுக்குமா நல்லாட்சி அரசு மக்கள் கேள்வி?

                                 -இல்லியாஸ் மஜீட்-
நிந்தவூர் பிரதேச பாடசாலைகள் சிலவற்றிற்கு பாடசாலைகளின் பழைய திருடர்களும், பொதுச் சொத்துக்களைத் தனதாக்கிக் கொண்ட மலை விழுங்கி மகாதேவன்களும், பல பெண்களின் கற்பைச் சூரையாடி அவர்களின் வாழ்வை நாசமாக்கிய கயவர்களும் குறுக்கு வழிகளில் அதிபர் பதவிகளைப் பெற்று, பாடசாலைகளை ஏற்றுக் கொண்டதனால் தற்போது பாடசாலைகளில் பகல் கொள்ளைகள் பல வழிகளிலும் நடைபெற்று வருவதாகவும், அதிகாரிகள் கண்களை மூடிக் கொண்டு செயற்படுவதாகவும் பொது மக்களும், பெற்றோர்களும், நலன் விரும்பிகளும் விசனந் தெரிவிக்கின்றனர்.

தற்போது நிந்தவூர் பிரதேசத்திலுள்ள அல்-அஸ்றக் கனிஸ்ட பாடசாலை, அல்-மஸ்ஹர் பெண்கள் (உயர்) பாடசாலை, இமாம் றூமி வித்தியாலயம், இமாம் கஸ்ஸாலி வித்தியாலயம், அல்-அதான் வித்தியாலயம், அஸ்-ஸபா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் புதிதாக முதலாம் ஆண்டில் சேர்க்கப்படும் ஏழை மாணவர்களிடத்திலும் கதிரை, மேசை வாங்குவதற்கென்று 2500 ரூபாய் வாங்கப்படுகிறதாம்.

இவற்றை அதிபர், ஆசிரியர்கள் வாங்கினால் குற்றம் என்பதற்காக சில முட்டாள்தனமான பெற்றோர்களைக் குழுவாக்கி, அந்தக் குழு மூலம் அறவீடுகளை நடாத்தி கல்வி அமைச்சையும், அதிகாரிகளையும், ஏழைப் பெற்றோரையும் ஏமாற்றி, சாதனை படைத்து, வீறாப்புப் பேசுகின்றனராம் சில குள்ளநரி அதிபர்களும், இந்த நரிகளுக்கு வால்பிடித்து கறண்டிக்காலை நக்குகின்ற ஓநாய் ஆசிரியர்களும் !.

ஒரு வருடத்தில் ஒரு பாடசாலையில் சுமார் 90, 100 பிள்ளளைகள் ஆண்டு 01ல் சேர்க்கப்படுகிறார்கள். ஆனால் இவர்களிடத்தில் பிடுங்கப்படும் 2500ரூபாவில் எத்தனை ,கதிரை மேசைகள் வாங்க முடியும்? அவ்வாறு வாங்கப்பட்டதாகக் கூறப்படும் கதிரை, மேசைகளை இந்த 1ம் ஆண்டு மாணவர்கள், 2ம் ஆண்டுக்குச் செல்லும் போது கூடவே ஒரு நாளும் எடுத்துச் செல்வதில்லையே! இது இவ்வாறு இருக்க, ஏன் ஒவ்வொரு வருடமும் பண அறவீடும், பணமோசடியும் இடம் பெற வேண்டும்?! உடைந்ததென்றாலும் 100க்கு 15 உருப்படிகளைக் கழித்து விட்டாலும், ஏனைய கதிரை மேசைகளுக்கு என்ன நடக்கிறது. நரிகளும், நாய்களும் எடுத்துச் செல்கின்றனவா? அல்லது பழையதுக்கு பெயினட்; செய்து விட்டு பணத்தை ஏப்பமிடுகின்றனரா? 'இந்தக் காலத்து அதிபர்களை நம்பவே முடியல்லடா தம்பி. பண்டிகளிடம் அவ்வளவு தெத்துப் பிரட்டுக்கள். கேவலம் பச்சப் பிஞ்சுகளுக்கு அரசு வழங்கிற காலை உணவில கூடக் கைவைக்கிர கயவர்கள் தூ..நாசமாப் போவானுகள்'. என்று நிந்தவூர் கடற்கரையில் கச்சான் விற்கும் கலிமத்து ராத்தா காறித்துப்பின காட்சி நமது செய்தியாளரின் கமறாவிற்குள் பதியப்பட்டுள்ளது.

இந்தப் பகல் கொள்ளைச் சம்பவங்களும், இது போன்ற பல அபகரிப்புக்களும், ஏமாற்று வித்தைகளும் ஒவ்வொரு வருடமும் மிகத் தைரியமாகவும், கவனமாகவும் அரங்கேற்றப்படுகின்றது.

இந்த விடயம் இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ், தாபன விதிக் கோவை ஏற்பாடுகளுக்கு அமையவும் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று கல்வி அமைச்சுச் செயலாளர் சுனில் கெட்டியாராட்சி அவர்களின் ஒப்பத்துடன் 33/2016ம் இலக்க சுற்றுநிருபம் வெளியாகியுள்ளதை நாமறிவோம். இச்செய்தியை கடந்த 2016.11.25ந் திகதிய தினகரன் பத்திரிகையிலும் பார்க்க முடியும்.


உடனடியாக இந்த நல்லாட்சி அரசும், நேர்மையும், துணிச்சலும் மிக்க கல்வியமைச்சரும், நேர்மையான அதிகாரிகளும் உடன் செயற்பட்டு இந்த அதிபர், ஆசிரியர்களுக்கும், இதற்குத் துணைபோன தனிப்பட்ட நபர்களுக்கெதிராகவும் நடவடிக்கை மேற்கொண்டு, தண்டனை வழங்குவதோடு, ஏழைப் பெற்றோர்களிடத்தில் பலாத்காரமாகப் பெறப்பட்ட பணத்தை மீண்டும் திருப்பி வழங்க நல்லாட்சி அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.!!!!??????!!!!??????????

இது நடைபெறுமா? இனிவருங் காலங்களிலாவது (அதிபர்களில் திருடர்கள்) குள்ளநரி அதிபர்கள் திருந்துவார்களா? காலந்தான் பதில் சொல்ல வேண்டும்! பொறுத்திருப்போம்!

இது போன்று பாடசாலைகளிலும், வைத்தியசாலைகளிலும், ஏனைய பொது இடங்களிலும் நடைபெறும் கொள்ளை, ஊழல்மோசடிகள், காமசூத்திரங்கள், பாலியல்சேட்டைகளை மக்களுக்குத் தெரியப்படுத்தவுள்ளோம். இதன் மூலம் அவர்களைத் திருத்துவதே எமது நோக்கம். எனவே எம்முடன் இணைந்திருங்கள்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.