கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்திற்கு புதிய பஸ்ஸினை அமைச்சர் நஸீர் வழங்கிவைத்தார்.


சப்னி அஹமட்-
கிழக்கு மாகாணத்தில் உள்ள முதியோர் இல்லங்களுக்கும், சிறுவர் பாதுகாப்பு இல்லங்களிலும் இருப்போரை கவலையின்றி புத்துனர்ச்சியுடன் அவர்களின் சமய சுற்றுலாக்களை ஏற்பாடு செய்து அழைத்து செல்வதற்காகவும் கிழக்கு மாகாணத்தில் சமூகசேவைகள் செயற்பாடுகளையும் கவனத்திற்க்கொண்டு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் சமூக சேவைகள் திணைக்களத்திற்கான புதிய பேரூந்து (பஸ்) சேவையினை இன்று (24) காலை கிழக்கு மாகாணசபை வளாகத்தில் வைத்து வழங்கி வைத்தார். 


குறித்த பேரூந்து கிழக்கு மாகாண சமூக சேவை பணிப்பாளரின் பிரதிநிதியாக கலந்துகொண்ட நிருவாக உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டது. 


இந்நிகழ்வின் போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், உதவிச்செயலாளர்களான ஜே.ஹுசைன்டீன், ஷியாகுல்ஹக், கணக்காளர் திருமதி திருக்குமார், அமைச்சரின் பிரத்தியேகச்செயலாளர் யூ.எம்.வாஹீட், அலுவலக நிருவாக உத்தியோகத்தர் ர.கேஸ்வரன் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.




Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.