போதை மாத்திரையான எம்பேடமின் மாத்திரைகள் சவுதி அரேபியாவுக்கு கொண்டு செல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவர் மற்றும் இரண்டு சிரிய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு ராஜ்ஜிய போதைப் பொருள் தடுப்பு பணியகத்தினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மூன்று கொள்கலன் பெட்டிகளில் 3.5 மில்லியன் போதை மாத்திரைகளை வேறு பொருட்களுடன் மறைத்து வைத்து சவுதி அரேபியாவுக்கு கொண்டு செல்ல முயற்சித்துள்ளனர்.
இந்த கடத்தலை கண்டுபிடிக்க வெளிநாடுகளின் பாதுகாப்பு நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்கியதாக சவுதி அரேபிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
சல்வா எல்லையில் உள்ள நுழைவு வாயிலில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 2.9 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் ட்ரக் சாரதியை சவுதி பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment