-சௌத்துல் உம்மத்-
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக என்னால் பிழையாக எழுதப்பட்ட கடிதத்தினை நிராகரித்து இதனை மன்னித்துக்கொள்ளுமாறு கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல். அலாவுத்தீன் தெரிவித்தார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மகிப்பாலவின் உத்தரவிற்கு அமைவாக இது தொடர்பான கலந்துரையாடல் இன்று (18) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்;
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீருக்கு எதிராக கடந்த வாரம் முறையற்ற விதத்திலும், தவறான முறையிலும் எழுதி அனுப்பப்பட்ட கடிதத்தினை நான் நிராகரிக்கின்றதுடன் இது தொடர்பாக ஊடங்களில் வெளியான செய்திகளையும் நிராகரிப்பதாகவும் நாளை முதல் எனது கடமைகளில் எவ்வித பிரச்சினைகளும் இன்றி தொடரவுள்ளேம் எனவும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் முருகானந்தன், சுகாதார அமைச்சின் செயலாளர் கருனாகரன் ஆகியோரினால் விடுக்கப்பட்ட சில கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட பின்னர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ. எல். முஹம்மட் நஸீர் மன்னிப்பை ஏற்றுக்கொண்டார்.
குறித்த சம்பவத்தை மன்னித்துக்கொள்ளுமாறும் இது தொடர்பான கடிடத்தினை இவ்விடத்தில் சமர்ப்பிக்கின்றேன் எனவும் தெரிவித்ததையடுத்து இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் முருகானந்தன், சுகாதார அமைச்சின் செயலாளர் கருனாகரன், உதவிச் செயலாளர் உசைனுடீன் ஆகியோர் முன்னிலையின் மண்ணிப்புக் கடிதத்தினை கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல். அலாவுத்தீன் கையளித்ததும் குறிப்பிடத்தக்கது.




Post a Comment