நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் மிகவும் நெருக்கமான யுவதி ஒருவரை கைது செய்ய இன்டர்போல் பொலிஸார் பிடியாணை பிறப்பித்துள்ளனர்.
பட்டபொல ஆராச்சிகே ஒரநெல்லா இரேஷா டி சில்வா என்ற நாமல் ராஜபக்ச நிறுவனத்தின் பணிப்பாளருக்கு எதிராகவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த யுவதிக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உடனடியாக தன்னுடன் தொடர்பு கொள்ளுமாறு தகவல் வழங்கியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
தற்போது வரையில் அபுதாபி நகரத்தில் ஷேக் ஒருவருக்கு சொந்தமான சர்வதேச நிறுவனத்தில் சட்ட நிர்வாகியாக செயற்படுகின்ற ஒரநெல்லாவை எப்படியாவது இணங்க வைத்து சிறிலங்காவுக்கு அழைத்து வருமாறு நாமல், தனது தந்தை மற்றும் நண்பர்களுக்கு விளக்கமறியலில் இருந்து ஆலோசனை வழங்கியுள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தின் இரகசிய தகவல்கள் பல அவரிடம் உள்ளமையினாலேயே அவ்வாறு நாமல் உட்பட ராஜபக்ச குடும்பத்தினர் ஒரநெல்லா இரேஷாவின் பின்னால் துரத்த ஆரம்பித்துள்ளனர்.
ஒரநெல்லாவினால் ராஜபக்ச குடும்பத்திற்கு சொந்தமான கிட்டதட்ட 400 மில்லியன் டொலர் சொத்துக்கள் பல்வேறு கணக்கின் ஊடாக பல்வேறு நாடுகளுக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளது. இவற்றில் அதகமானவைகள் சீஷெல்ஸ் அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆரம்பத்தில் அவரது தொலைப்பேசிக்கு அழைப்பேற்படுத்தியிருந்த நாமலின் நெருங்கிய நண்பர்கள் “ஏதாவது தகவல்களை வெளியிட்டால் அவரை அல்லது அவரது சகோதரர்களை கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
எனினும் இறுதியில் திட்டத்தை மாற்றிக் கொண்டு அவரை நண்பராக்கி கொள்வாற்காக நாமல் தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதியை பயன்படுத்தியுள்ளார்.
நேற்று மற்றும் நேற்று முன்தினம் முழுவதும் அவரது தொலைப்பேசியிற்கு மஹிந்த ராஜபக்ச அழைப்பேற்படுத்தியிருந்த நிலையில் அவர் அதற்கு பதிலளிக்காத நிலையில் குறுந்தகவல் ஊடாக பயமின்றி சிறிலங்காவுக்கு வருமாறும் அவரது பாதுகாப்பிற்கு தான் பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த குறுந்தகவல் அனுப்பியவுடன் ஒரநெல்லா தனது தொலைப்பேசியை செயலிழக்க செய்து விட்டு தனது சிம் காட்டை உட்பட நீக்கியுள்ளார் என நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளார்.
இன்டர்போல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலைமையின் கீழ் அவர் தொடர்ந்து அபுதாபி நகரத்தில் ஷேக்கின் நிறுவனத்தில் சேவை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தற்போது வரையில் மேற்கத்திய நாடுகளின் தூதரக பிரிவுகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதாகவும், ஏதாவது ஒரு நாட்டில் அரசியல் தஞ்சம் பெற முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
அவ்வாறு தனது அரசியல் தஞ்சம் வழங்கினால் தன்னிடம் உள்ள அனைத்து தகவல்களையும் வழங்குவதாக ஒரநெல்லா வாக்குறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment