இலங்கை முஸ்லிம்களை அரை மணி நேரத்தில் அளித்துவிடுவோம் என எச்சரிக்கை விடுத்த சின்ஹலே அமைப்பின் ஆதரவாளரை உடன் கைது செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசின்ஹ பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு கட்டளையிட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற எம் எல்லோருக்கும் ஒரே இரத்தம் அமைதிப்பேரணியில் குழப்பம் விளைவித்த சின்ஹ லே அமைப்பின் ஆதரவாளர் ஒருவர் இலங்கையிலுள்ள முஸ்லிம்களை அரை மணி நேரத்தில் அழித்துவிடுவோம் என சவால் விடுத்ததோடு இது சிங்கள நாடு எனவும் தெரிவித்திருந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் நேற்று இரண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முறைப்பாட்டினை தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி மற்றும் சட்டத்தரணி ஹிஜாஸ்,அஸ்லம் ஹாஜியார் ஆகியோரினால் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் உடன் நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

Post a Comment