ஹெரோயின் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் திருகோணமலையில் ஒருவர் கைது



                                அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை -ஆண்டாங்குளம் பகுதியில் 630 மில்லிகிரேம் ஹெரோயின் தம்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 05ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (23) திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி்சரவணராஜா உத்தரவிட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை-ஆண்டாங்குளம்-10 வீட்டுத்திட்ட வீதியைச்சேர்ந்த எஸ.ரோஹன குலதுங்க (42 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேச நபர் திருகோணமலை பிரதேசத்தில் ஹெரொயின் விற்பளை செய்து வருவதாக திருகோணமலை போதை வஸ்து தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இச்சந்தேக நபரை சோதனை செய்தபோது 630 மில்லி கிரேம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.





News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.