நிந்தவூர் இமாம் றூமி வித்தியாலயத்தி;ல் வளமையாக நடைபெற்று வரும் விசேட குடும்ப இப்தார் நிகழ்வு இம்முறையும் சிறப்பாக நேற்று இடம் பெற்றது.
வித்தியாலய அதிபர் அல்ஹாஜ்.ஏ.சீ.ஹாமீது தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கல்முனைக் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றஹீம் பிரதம அதிதியாகவும், கணக்காளர் கே.எம்.றிஸ்வி யஃஸர் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விப்தார் நிகழ்வில் அதிபர், ஆசிரியர்களின் குடும்ப உறவினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை விசேட அம்சமாகக் காணப்பட்டது.
வித்தியாலய மௌலவி ஆசிரியர் எம்.ஏ.அமீர் அலியார் அவர்களின் ஏற்பாட்டிலான பயான் நிகழ்வும் இடம் பெற்றது. இதில் சங்கைக்குரிய உலமா சாலிஹீன் மௌலவி அவர்களால் விசேட பயான் நிகழ்த்தப்பட்டது.
Post a Comment