தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே. பியசேனவிற்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வழங்கிய பிராடோ ஜீப் வண்டியை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு ஓட்டி வந்த சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் ஜீப் வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த ஜீப் வண்டியை திரும்ப பெற்றுக்கொள்ள அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி கடந்த ஒரு வருடமாக பலனளிக்கவில்லை.
இந்த நிலையில், சாரதி வண்டியை பொலிஸ் நிலையத்திற்கு ஓட்டி வந்துள்ளார்.
வண்டியை ஓட்டி வந்த சாரதி முன்தினமே வேலையில் சேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளதுடன் வண்டியும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.
மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவை பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளிக்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பியசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் நாடாளுமன்றத்திற்கு தெரிவானதுடன் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து, கடந்த அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார்.
கடந்த பொதுத் தோ்தலில் மஹிந்த அணியுடன் இணைந்து போட்டியிட்ட போது படு தோல்வியடைந்த பியசேன அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனத்தை ஒப்படைக்காமல் தனது தனிப்பட்ட தேவைக்காக பயன் படுத்தி வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment