யாழ்ப்பாணம் – இணுவில் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை முற்பகல்
வீதியின் குறுக்கே வந்த நபரை காப்பற்ற முயன்றதால் அம்புலன்ஸ் இவ்வாறு விபத்துக்குள்ளாகியிருப்பதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில் இருந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான அம்புலன்ஸ் வண்டியொன்று தெல்லிப்பளை நோக்கி சென்றுள்ளது.
இதன் போது இணுவில் சந்திக்கு அண்மையில் தீடிரென அருகில் இருந்த வீதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பிரதான வீதியின் குறுக்கே வந்துள்ளார்.
உடனடியாக குறித்த நபரை காப்பாற்றும் வகையில் அம்பியூலன்ஸ் சாரதி வாகனத்தை மறுபக்கம் திரும்பியுள்ளார்.
இதனால் அம்புலன்ஸ் வண்டி வீதியின் அருகில் இருந்த பால் விற்பனை நிலையத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.
எனினும் விபத்தில் வாகன சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதுடன் இவ் விபத்து தொடர்பாக விசாரனைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment