(ஜெமீல் அஹமட்)
இன்று முஸ்லிம் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள அதிகார சண்டையில் கட்சியின் வரலாறு தெரியாமல் சில கழுதைகள் குதிரை போல் வேஷம் போட்டு ஊழையிடுகின்றன
அஸ்ரப் அவர்களின் சமுதாய சிந்தனையுடன் எழுச்சி பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மூன்று முத்துக்களின் சொத்து என்பதால் முதல் தலைவராக அஸ்ரப் பதவி வகித்தார் இரண்டாவது தலைக்குரியவர் சேகு இஸ்ஸதீன் அவர் தற்போது கட்சிலிருந்து விலகியதால் மூன்றாவது தலைமை தாங்கும் தகுதியுடையவர் தற்போதைய செயலாளர் ஹசன் அலி என்பது கட்சியின் மூத்த போராளிகளுக்கு மட்டும் தெரியும்
ஆனால் குர்ஆன் ஹதீஸ் மசூரா என்ற கோட்பாட்டில் இருக்கும் கட்சிக்கு யார் தலைவராக இருந்தாலும் மசூரா முடிவின்படி தீர்மானம் மேற்கொள்ளும் போது கட்சியில் பிளவு ஏற்படாது என்ற சிந்தனையில் தலைமை பதவியில் ஹசன் அலி கவனம் செலுத்தாமல் இருந்த காரணத்தால் கிழக்கு மக்களை ஏமாற்றி கபடதனமாக தலைமை பதவியை பெற்று கொண்டவர் தான் இந்த கண்டி மண்னன் என்பதை புரியாதவர்கள் ஹசன் அலி மீது குற்றம் சுமத்துகின்றனர் இவர்கள் முஸ்லிம் காங்கிரஸின் கிறீன் காட் CREEN CARD அங்கத்தவர்கள் தான் வேறு முஸ்லிம் காங்கிரஸின் உண்மையான போராளிகள் இல்லை
கட்சியின் முடிவுகள் மசூரா அடிப்படையில் எடுக்க வேண்டியவை இன்று சர்வதிகார போக்குடன் ஹக்கீம் தனது கூலிப்படைகளின் ஆதரவுடன் முடிவை எடுப்பதால் தற்போது ஹக்கீமின் தலைமை பதவிக்கு ஆபத்து வந்துள்ளது இப்படியான ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள மேற்கொண்ட கண்டி யாப்பு தேர்தல் ஆனையாளரினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது
கண்டி யாப்புக்கு உயர்பிட உறுப்பினர்கள் அதிகமானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் புதிய யாப்பை ஹசன் அலி உறுதிப்படுத்தும் வரை அவரே அதிகாரம் கொண்ட கட்சியின் செயலாளர் என்ற நிலை உருவாகியுள்ளது இதனால் புகையிலை தீண்ட ஓனான் போல் ஹக்கீம் தீண்டாடுகின்றார் தன் வீனை தன்னை சூடும் என்பது போல் நிரந்தரமற்ற உலகில் கேவலம் தலைமை பதவிக்காகவும் தனது சஹபாக்களை திருப்த்திபடுத்த வந்த கண்டி யாப்பு மூலம் தனது தலையில் தானே மண்னை போட்டு கொண்டுள்ளார்
தற்போது தனது தவறை மறைக்க அம்பாறை மாவட்டத்தில் ஒரு குழுவை உருவாக்கி அவர்கள் மூலம் கட்சிக்குள் தேசியப்பட்டியல் பிரச்சினை தான் ஹசன் அலியால் உருவாகியுள்ளது வேறு ஏதுவுமில்லை என்ற நாடகம் அரங்கேற்றியுள்ளார்
ஹக்கீமால் பதவி பெற்று சொகுசா வாழும் கூட்டம் குதிரை அல்ல கழுதை என்று மக்களுக்கு நன்கு தெரியும் அது போல் இந்த ஹக்கீம் ஒரு சட்டத்தரனி அவரின் தொழில் உண்மையை பொய் என்றும் பொய்யை உண்மை என்றும் கூறுவதேயாகும் அதனால்தான் இது வரை சமுதாயத்தை ஏமாற்றி அரசியல் செய்து வருகிறார் ஆனால் தற்போது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் ஹசன் அலியின் நெத்தலி வலையில் மாட்டிக் கொண்டு உள்ளார்
இனிமேல் தலைவர் பதவியை பாதுகாக்க வேண்டும் என்றால் தனது சஹபாக்களை ஓரங்கட்டி பஷிர் ஹசன் அலி ஆகியோரிடம் சரனாடையும் நிலை வந்துள்ளது இப்படியான நிலையால் மட்டுமே தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு கானலாம்

Post a Comment