அம்பாறையில் கண்காணிப்பு தீவிரம் ; இரவில் சிவில் உடையில் விசேட பொலிஸ் குழுக்கள்



அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில், இப்பிரிவில் சந்தேகத்துக்கிடமானவர்கள் நடமாடினால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில், கேட்டுக்கொண்டுள்ளார். 

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களிலுள்ள கடைகள், வீடுகள் இரவு வேளைகளில்; உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. 

இத்திருட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு இரவு வேளைகளில் சிவில் உடையில் விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வீடுகளில் பணம் மற்றும் தங்கநகைகள் வைப்பதைத் தவிர்த்து வங்கிகளில் வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இத்திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.