கல்முனையில் தூக்கில் தொங்கிய நிலையில் தாயொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கல்முனை-01, ஸ்ரீ சந்தானேஸ்வரர் சிவனாலய வீதியில் வசித்து வந்த திருமதி திலகேஸ்வரி சந்திரசேகரன் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டார்.
இரண்டு பிள்ளைகளின் தாயாரான இவர், தனது மாமியாருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக தூக்கில் தொங்கி இறந்திருக்கலாம் என பிரதேச தகவல்கள் மூலம் அறியக்கிடைக்கின்றது

Post a Comment