18.04.16- நிந்தவூரில் கோர விபத்து: ஒருவரின் நிலை கவலைக்கிடம்



நிந்தவூர் - அட்டப்பள்ளம் பிரதானவீதியில் இன்று 18ம் திகதி காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதுடன், மோதுண்ட வாகனங்கள் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளன.

இவ் விபத்துச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது..

அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பத்திரிகை ஏற்றிச் செல்லும் வண்டியும் , கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாலேயே மேற்படி விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.

இவ் விபத்தில் பத்திரிகை ஏற்றிச் சென்ற வாகன சாரதியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பஸ் பண்டியில் பயணித்த பலருக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் , விபத்தில் சிக்கிய இரு வாகனங்களுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.



































News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.