(மிக நீண்ட நாள் அவதானிப்பின் பின்னரே இந்த பதிவு இடப்படுகிறது.)
மறைந்த தலைவர் அஷ்ரபின் முயற்சி காரணமாக எம் பிரதேச மக்களுக்கு பயன்தரும் வகையில் கட்டப்பட்ட வைத்தியசாலையே கல்முனை AMH வைத்தியசாலை.
ஆனால் இன்று இது மக்கள் அனைவருக்கும் “பயம்” தரும் வைத்தியசாலயாகா மாறிவருகின்றது.
AMH இல் இருக்கும் பிரசவ வார்ட் பிரசவ தாய்மார்களை அவஸ்தைபடுத்தும் வார்டாக மாறிக்கொண்டு வருகிறது. வேலியே பயிரை மேய்வது போன்று இதில் உள்ள தாதிமார்கள், தாதி உதவியாளர்கள். அநாகரிகமாகவும் பொறுப்பற்றும் நடந்துகொள்கிறார்கள் என்ற முறைப்பாடு பல ஆண்டுகாலமாக இருந்து வருகிறது.
எமது சகோதரிகள் குழந்தை பெறச்செல்லும் பிரசவ அறைக்குள் இருக்கும் தாதிமார்கள், பிரசவ வலியில் துடிக்கும் பெண்களை பார்த்து கேலி செய்வதோடு, கேவலாமான வார்த்தைகளோடும் திட்டுகின்றனர்.
சம்பவம்:- 1
பிரசவ வலியில் துடித்த பெண் ஒருவரிடம் ஒரு தாதி கூறிய வார்த்தை “ ஓக்கத் தெரியும் புள்ள பொற தெரியாதா..? “ என்று பிரசவ அறையில் வைத்து கேட்டுள்ளார்.
(ஊர்ஜிதப்படுத்தப்பட்ட சம்பவம்.)
தாதி தொழிலின் மேன்மையை மாசுபடுத்தும் இப்படியான தாதிமார்கள் தற்போது எம் வைத்தியசாலையில் ஏராளம். நோயாளிகளிடம் ஒரு விதமான அதிகாரத் தொனி அனைவருக்கும். வைத்தியர்களும் கூட.
மக்களின் வரிப்பணத்தில் வயிற்ரை கழுவிக்கொண்டு அவர்களை ஏளனம் செய்வது போன்ற இந்த நடவடிக்கைகள் எத்தகைய கீள்தனமானது.

இந்த தாதிமார்களின் அதட்டலாலும், கேவலமான செயற்பாடுகளாலும் பல தாய்மார்கள் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு தம் மகப்பேற்றுக்காக செல்கின்ற சூழ்நிலை பரவலாக எம் ஊர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலை வரவு செலவு கணக்குகளை நோண்டுவதில் அக்கறை காட்டும், அமீர் அலி(MPஹரீஸின் சகோதரர் ) வைத்தியடாலை பொறுப்பதிகாரிகளும் இந்த விடயத்தில் அக்கறை காட்டாமல் ஏன் உள்ளனர்??
பல தடவைகள் பலரால் இந்த விடயங்கள் நான் அறிய வைத்தியசாலைக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் எந்த மாற்றமும் நடந்ததாய் தெரியவில்லை.
இவ்வாறான தாதிமார்களை இனங்கண்டு பொருத்தமான தாதிமார்களை பிரசவ விடுதிக்கு அமர்த்துவது கால கட்டாய தேவை.
நோயாளிகள் சிறந்த முறையில் காவனிக்கபட்டால்தான் நோயாளிகளின் நாட்டம் நம் வைத்தியசாலை மீது இருக்கும். அவ்வாறில்லாமல் இந்நிலை தொடர்ந்தாள் பழைய மடுவமாக AMH மாறுவது நிச்சயம்.
வைத்தியசாலை அத்தியட்சகரே , அரச அதிகாரிகளே, கல்முனை பொது அமைப்புக்களே , இது உங்களின் கவனத்திற்கு!
-Jahan Mohamed Aazath
Post a Comment