ஜோசப் பரராஜசிங்கத்தை படுகொலை செய்தவர்களுக்கு தொடர்கிறது சிறைவாசம்



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நான்கு பேரையும் எதிர்வரும் ஏப்ரல் 06ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று புதன்கிழமை இவர்களை ஆஜர்படுத்தியபோதே, அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

பிள்ளையான் குழு தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பிள்ளையான் குழு அடியாளான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில்; நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

மேலும்,பிள்ளையான் குழு தலைவரால் பிணைமனுக் கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை எதிர்வரும் ஏப்ரல் 01ஆம் திகதி நடைபெறவுள்ளது.



Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.