Articles by "Islam"

Showing posts with label Islam. Show all posts

                   ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சீரிய சிந்தனைகளை சிரமேற் கொண்ட கல்முனை வலயக் கல்விக் காரியாலயத்தினர், அனைவரும் ஒன்றிணைந்து 'போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான சித்திரை மாத உறுதி மொழி' எனும் மகுடத்தில்  போதைக்கு எதிராக சத்தியப் பிரமாணஞ் செய்து கொள்ளும் நிகழ்வு இன்று காலை கல்முனை வலயக் கல்விக் காரியாலயத்தில் இடம் பெற்றது.

வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் வலயக் காரியாலயத்திலுள்ள கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சத்தியப் பிரமாணத்தில் ஈடுபட்டனர்.

சத்தியப் பிரமாண நிகழ்வைத் தொடர்ந்து, இது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டமொன்று பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையில் இடம் பெற்றது. இதில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எஸ்.எல்.ஏ.றகீம், பி.எம்.வை.அறபாத், திருமதி.ஜிஹானா அலீப், ஜே.ஏ.மலீக், ஏ.பி.எப்.நஸ்மியா, ஆசிரிய ஆலோசகர் திருமதி. பத்திரண ஆகியோரும் போதைக்கு எதிராகக் கருத்துக்கள் தெரிவித்தனர்.

வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:-' அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மக்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு முன்னெடுத்துவரும் திட்டங்களில் 'போதை ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு' போன்றவை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றன. இவை இரண்டும் ஒழிக்கப்பட்டால் உண்மையில் எமது நாடு உலகில் முதன்மை பெற்ற நாடாகி விடும். எனவே எமது நாட்டை இதுவரை ஆட்சி புரிந்த ஜனாதிபதிகளில் மைத்திரிபால சிறிசேன அவர்கள் உண்ணதமானவராகக் காணப்படுகிறார். இவரது சீரிய சிந்தனைகளுக்கு மதிப்பளித்து, நமது சத்தியப் பிரமாணத்தில் உள்ளவற்றை நமது வாழ்விலும், மற்றவர் வாழ்விலும், மாணவர் வாழ்விலும் நடைமுறைப்படுத்துவதற்கு வழிவகுப்போம்' எனத் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் தமிழ், முஸ்லிம், சிங்கள மூவின உத்தியோகத்தர்களும் நல்லுறவுடன் செயற்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கிறார்.















                    ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரியாக கடமை புரிந்த அரச கல்வி நிருவாக சேவை அதிகாரியான மருதமுனையை சேர்ந்த திருமதி ஜிஹானா அலிஃப் கல்முனை வலயக் கல்வி அலுவலக முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக மீண்டும் இன்று (24) நியமிக்கப்பட்டுள்ளார் .
கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவத்துக்குப் பொறுப்பாக கடமையாற்றிய Dr.S.M.M.S. உமர் மௌலானா மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்துக்கு வலயக்கல்விப் பணிப்பாளராக உயர்வு பெற்று சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு திருமதி ஜிஹானா அலிஃப் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் M .S .அப்துல் ஜலீல் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்
சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் உதவிக்கல்விப் பணிப்பாளராகவும் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப்பணிப்பாளராகவும் ,நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரியாகவும் கடந்த காலங்களில் கடமை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

                      (வாழைச்சேனை நிருபர்)
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேனவின் புதல்வி சதுரிக்கா சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதிக்கான அமைப்பாளரின் மக்கள் தொடர்புக் காரியாலயத்தை வியாழக்கிழமை (01) திறந்து வைத்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதிக்கான அமைப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ்.ஹாறூன் ஸஹ்வி அழைப்பினை ஏற்று சதுரிக்கா சிறிசேன ஒட்டமாவடிக்கு வருகை தந்தார்.

இதன் போது மக்கள் தொடர்புக் காரியாலயத்தை திறந்து வைத்ததோடு, அல் கிம்மா நிறுவனத்தினையும் பார்வையிட்டதுடன், எல்லை வீதி மீராவோடையில் உள்ள அந்நூர் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிருக்கான சந்திப்பில் கலந்து கொண்டார்.

                         (வாழைச்சேனை நிருபர்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் பணிரெண்டு உள்ளுராட்சி மன்றங்களை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கைப்பற்றும் என்று மீள்குடியேற்ற இராஜங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்த பின்னர் இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற் சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் பணிரெண்டு உள்ளுராட்சி மன்றங்களிலே போட்டியிடுகின்றது அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவான அபிவிருத்திகள் செய்ய வேண்டியுள்ளது இத் தேர்தல் ஆட்சியை மாற்றுகின்ற தேர்தல் அல்ல இத் தேர்தல் தங்களது பிரதேசங்களை அபிவிருத்தி செய்கின்ற பிரதேசத்தை சுத்தம் செய்கின்ற தேர்தல்.

இன்னும் மூன்று வருடங்களுக்கு இந்த ஆட்சி தொடரும் அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து இன மக்களும் ஒன்று பட்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு வாக்களித்து வெற்றியடையச் செய்வதன் மூலம் எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் ஒரு புதிய புரட்சியின் மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளுராட்சி மன்றங்களை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கைப்பற்றும்







-பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் றாபீ பிரதம அதிதி-
                       ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் பிரதேச சபையினால் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும், சிறந்த வாசிப்பாளர்களையும் பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வு நேற்று நிந்தவூர் அமீர் மேர்சா பொது நூலகத்தில் இடம் பெற்றது.

பிரதேச சபைச் செயலாளர் ஏ.ஏ.சலீம் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அம்பாரைப் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபீ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.ஆர்.யூ.அப்துல் ஜலீல், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.பி.மௌலானா, நிந்தவூர் மக்கள் வங்கி முகாமையாளர் எஸ்.நசுறுத்தீன், ஓய்வு நிலை அதிபர்களான எம்.எம்.றஹீம், ஏ.லாபீர் உள்ளிட்ட கல்விமான்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும், நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதே வேளை பொது நூலகத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தவறாது பயன்படுத்திய வாசகர்கள் மூவருக்குப் பொன்னாடைகள் போற்றி, நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


இன்னும் தேசிய ரீதியில் முதலாமிடம் பெற்ற நிந்தவூர் அமீர் மேர்சா பொது நூலகத்தின் நூலகர் திருமதி.யூ.எஸ்.சபீக் அஹமட் அவர்களும் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டார்.

பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபீ இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'பாடசாலை மாணவர்கள் நன்மை பெறவேண்டும் என்ற நன்நோக்கில் தற்போது எமது அரசாங்கம் நூலகங்களில் அதிகளவான பணத்தினைச் செலவு செய்து, மாணவர்களின் கல்விக்கு உதவக் கூடிய, பெறுமதியான நூல்களைக் கொள்வனவு செய்து வைக்க உதவி வருகிறது. எனவே மாணவர்கள் தமது பாடப்புத்தகங்களுக்கு மேலதிகமாக நூலகங்களிலுமுள்ள புத்தகங்களையும் பயன்படுத்தி நன்மை பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்' எனத் தெரிவித்தார்.












                                        ( ஏ.ஆர்.மதீஹா றபீக் )
நிந்தவூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், நிந்தவூர்ப் பிரதேச பாலர் பாடசாலைகளுக்க்pடையில் அண்மையில் நடாத்தப்பட்ட 'உற்பத்தித் திறன் விருது வழங்கல் போட்டியில்' சங்கைக்குரிய உலமா அஸ்சேஷ்.எம்.ஐ.எம்.ஹிதாயத்துல்லாஹ் மௌலவி அவர்களைத் தலையாகக் கொண்டு இயங்கிவரும் 'அல்-ஹஸனாத் பாலர் பாடசாலை' முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

உற்பத்தித் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.அப்துல் சலாம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகவும், உதவிப் பிரதேச செயலாளர் அஸ்சேஷ்.ரி.எம்.எம்.அன்சார் நளீமி கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

உற்பத்தித் திறன் விருது வழங்கல் போட்டி 2017ல் நிந்தவூர் பிரதேசத்திலுள்ள மொத்தம் 28 பாலர் பாடசாலைகள் பங்கு கொண்டன. அதில்  அல்-ஹஸனாத் பாலர் பாடசாலை முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.










 




Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.