நான் வெற்றி பெற்றால் எனது பிரதேச மக்களின் வறுமையைப் போக்கி, அபிவிருத்திக்கான நிதியை கையாடல்கள் எதுவுமில்லாது பாதுகாப்பேன்.

-ஐ.தே.க நிந்தவூர் பிரதேச சபை வேட்பாளர் ஏ.அலிக்கான் தெரிவிப்பு-
                       ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
'நான் இத்தேர்தலில் வெற்றி பெற்றால் எனது பிரதேச மக்களின் கஷ்டங்களைப் போக்கி, இப்பிரதேச சபையினால் மக்களின் தேவைகளின் பொருட்டு ஏற்படுத்தப்படவிருக்கும் அபிவிருத்தி நிதியில் இறைவனைப் பயந்து, எவரேனும் ஒரு சதங்கூடக் கையாடல் செய்யவிடாமல் தடுத்துப் பாதுகாப்பேன்' என்று நிந்தவூர் பிரதேச சபைக்கு மாந்தோட்ட வட்டாரம்-01ல் ஐ.தே.க சார்பில் போட்டியிடும் ஸ்ரீ.ல.மு.கா வேட்பாளர் ஏ.அலிக்கான் தெரிவித்தார்.

வேட்பாளர் ஏ.அலிக்கானை ஆதரித்து நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத் தலைவர் ஏ.எம்.அன்சார் மாஸ்டர் தலைமையில் இன்று மாலை இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்:- 'நான் வாழ்வில் கடின உழைப்பால் முன்னுக்கு வந்தவன். அதற்கு எனது தகப்பனார் நேர்வழி காட்டினார். நான் பிறந்ததும் நல்ல ஒழுக்கமுள்ள குடும்பத்தில். திருமணஞ் செய்ததும் நல்ல ஒழுக்கமுள்ள குடும்பத்தில். நான் எப்போதும் அல்லாஹ்வுக்குப் பயந்து பணி செய்கின்றவன். ஓவ்வொரு வருடமும் மக்கா சென்று இறைவழிபாட்டில் ஈடுபடுபவன். தவிர்க்க முடியாத காரணத்தால் கடந்த வருடம் மக்கா சென்று, உம்றா செய்ய முடியவில்லை. அதனால் எனது வியாபாரத்தில் இலாபம் குறைவடைந்துள்ளதை அறிந்துள்ளேன். இவ்வாறு அல்லாஹ்வுக்குப் பயந்தே எனது செயற்பாடுகளை முன்னேடுக்கிறேன். 

நான் ஹலாலான வியாபாரத்தின் மூலம் முன்னேறியுள்ளேன். என்னிடத்தில் தேவையான அளவு பணமிருக்கிறது. அல்லாஹ்வைத்தவிர நான் யாருக்கும் அடிமையுமில்லை. என்னை எவராலும் விலை கொடுத்து வாங்கவும் முடியாது. நான் மக்களின் அழைப்பை ஏற்றே அரசியலில் குதித்துள்ளேன். 

எனக்கு நிறைய அரசியல்வாதிகளையும், அமைச்சர்களையும் தெரியும். அதுமாத்திரமன்றி எமது ஜனாதிபதியுடனும் நெருக்கமான உறவைப் பேணி வருகிறேன். நான் இத்தேர்தலில் வெற்றி பெற்றால், அல்லாஹ் முந்தி இரண்டாவதாக அமைச்சர், ஜனாதிபதி போன்றவர்களுடன் வைத்திருக்கும் உறவுகளின் துணை கொண்டு, எமது பிரதேச மக்களின் கஷ்டங்களைப் போக்கக் கூடிய நல்ல பல திட்டங்களை முன்னெடுக்க உத்தேசித்துள்ளேன். இதன் மூலம் ஏழை, எளிய மக்களின் வறுமையைப் போக்க திடசங்கற்பம் பூண்டுள்ளேன். இது மாத்திரமன்றி மக்களின் பணத்தைக் கொள்ளையிடும் கொள்ளைக் கூட்டத்திடமிருந்து நிந்தவூர் பிரதேச சபையைப் பாதுகாத்து, ஊழலற்ற மக்களுக்குச் சேவை செய்கின்ற மக்கள் மண்றமாக்கத் துடித்துக் கொண்டிருக்கிறேன்' எனத் தெரிவித்தார். 






Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.