நிந்தவூர் இமாம் றூமி வித்தியாலய அதிபருக்கெதிரான இலஞ்ச ஊழல் விசாரணைகளுக்கு முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரிக்கு அழைப்பாணை!

                                ( எஸ்.றேனுகா )
நிந்தவூர் இமாம் றூமி வித்தியாலய அதிபருக்கு எதிராக 2017ம் ஆண்டு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக விளக்கமளிப்பதற்கு நிந்தவூர் முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீமுக்கு இலஞ்ச ஊழல்களுக்கு எதிரான அணைக்குழுவினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இவருடைய பதவிக்காலத்தில் இமாம் றூமி வித்தியாலய அதிபர் பல்வேறு ஊழல் மோடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அது தொடர்பான முறைப்பாடுகளைப் பெற்றோர், ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சபையினர் போன்றோர் முன்வைத்தும் அதிகாரிகள் எவராலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் தெரிவித்ததைத் தொடர்ந்தே மேற்படி முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரிக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

மேலும் இது தொடர்பாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர், தொடர்பான உயர்தர உத்தியோகத்தர்களிடமும் சாட்சியங்கள் கோரப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.