முஸ்லிம் காங்கிரசுக்கு அளிக்கப்படும் வாக்குகள் வடக்கையும், கிழக்கையும் இணைக்க வழிவகுக்கும்! மு.கா தலைவர் அதைத்தான் செய்யப்போகிறார்!?

-வேட்பாளர் பொறியிலாளர் வாக்கீர் ஹூசைன் தெரிவிப்பு-
                        ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
'இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் வரும் முஸ்லிம் காங்கிரஸ் காரர்களுக்கு நீங்கள் அளிக்கப் போகும் ஒவ்வொரு வாக்கும் வடக்கையும், கிழக்கையும் இணைக்கவே வழிவகுக்கும். இதற்கு நீங்கள் உடன்பாடில்லை என்றாலும், எம்மை விற்று அரசியல் புளப்பு நடத்தும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அதைத்தான் செய்யப்போகின்றது. இந்தத் தேர்தல் வெறும் சாதாரணமான பிரதேச சபைத் தேர்தல் அல்ல. நீங்கள் நிச்சயமாக மிகவும் தெளிவாக ஆராய்ந்து, உங்கள் பொன்னான வாக்குகளை இடவேண்டிய ஒரு இக்கட்டான காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறீர்கள்' என்று ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் நிந்தவூர் பிரதேச சபைக்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் பொறியியலாளர் ஏ.பி.வாக்கீர் ஹூசைன் தெரிவித்தார். 

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் நிந்தவூர் பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று நிந்தவூர் கடற்கரை வீதியில் இடம் பெற்ற ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வேட்பாளர் பொறியியலாளர் ஏ.பி.வாக்கீர் ஹூசைன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தேசியத்தலைவரும், முன்னாள் மு.கா செயலாளர் நாயகமுமான எம்.ரி.ஹசன் அலி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எம்.றசாக் ஜவாத், முன்னாள் நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளரும், வேட்பாளருமான எம்.ஏ.எம்.தாஹீர், வேட்பாளர்களான ஐ.எம்.இல்லியாஸ், வாஹீத் மாஸ்டர், எம்.எம்.சம்சுதீன் வட்டானை, ஏ.அஸ்பர், ஊர்காவல் மஜீத் போன்ற பலரும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.



Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.