
சிரேஷ்ட ஊடகவியலாளரும், உதவிக் கல்விப் பணிப்பாளரும், தமிழர் ஆசிரயர் சங்கத் தலைவரும், பல்வேறு சமூக நல அமைப்புக்களின் பதவிநிலை உத்தியோகத்தருமான விபுலமணி வீ.ரி.சகாதேவராஜாவின் அன்பு மனைவியும், காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் விஞ்ஞானப் பாட சிரேஷ்ட ஆசிரியருமான திருமதி.நேசரஞ்ஜினி சகாதேவராஜா இன்று காலமானார்.
அமரர் நேசரஞ்ஜினி சகாதேவராஜாவின் பூதவுடலுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விசார் உயரதிகாரிகள், ஊடகவியலாளர்கள், உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் எனப் பெருந்திரளானோர் இறுதி அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இவரது பூதவுடல் நாளை காலை 10.00 மணியளவில் காரைதீவு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.








Post a Comment