இருதய நோயுள்ள 22 வயது இளைஞன் தூக்கிட்டுத் தற்கொலை!


         -காரைதீவு வீட்டில், சாமியறையில் சம்பவம்-
                       ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அம்பாரை, காரைதீவு வீடொன்றில் சாமியறையில் 22 வயது இளைஞன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று நேற்றிரவு (04) இடம்பெற்றுள்ளது.

கணகரெத்னம் பிரசாந்(வயது 22) எனும் இளைஞனே இவ்வாறு பரிதாபகரமான மரணத்தைத் தழுவிக் கொண்டவராவார்.

இதுபற்றித் தெரியவருவதாவது:-   
மறணத்தைத் தழுவிக் கொண்ட கணகரெத்னம் பிரசாந் இயற்கையிலேயே இருதய நோயினால் பீடிக்கப்பட்டவராவார். இவர் மது அருந்துவதிலும், புகை பிடிப்பதிலும் அலாதி பிரியமுடையவராவார். சம்பவ தினத்தன்று (04) வெளியிலிருந்து போதையுடன் வீட்டுக்கு வந்தவர், சாமியறைக்குச் சென்று கதவுகளைச் சாத்திக் கொண்டார். வழமைபோன்று தூங்குகிறார் என உறவினர்கள் நினைத்திருக்கின்றனர். ஆனால் நீண்ட நேரமாகியும் பிரசாந் வெளியில் வராததால் அவருடைய உறவினர்கள் சென்று அறையைப் பார்த்த போது சாமியறையில் சாரியில் சுருக்கிட்டுத் தூங்குவதைக் கண்டு அலறியடித்துக் கொண்டு ஓடிப்போய், சுருக்கைக் கத்தியால் வெட்டி, மயக்க நிலையிலிருந் பிரசாந்தை அருகிலுள்ள சாய்ந்தமருது வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

' எனது தம்பி பிரசாந் வளமையாகக் குடிக்கின்ற பழக்கமுடையவர். குடித்துக் கொண்டு வந்தால் என்னையும் பிள்ளைகளையும் திட்டுவார். அவர் சிறுவயதிலிருந்து இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதால் நாங்கள் அவரைக் கோபிப்பதில்லை. மறணிப்பதற்கு முன்னர் போதை இல்லாத நிலையில், 05ந் திகதி சுனாமி வருகுதாம். அதில் நான் மட்டும் தப்பிருவன். நீங்களெல்லாம் சுனாமில போயிருவிகள்' என்று மருமக்களிடம் சொல்லிக் கொண்டு சிரித்தார். அதன் பிறகுதான் வெளியில் சென்று வந்து தற்கொலை செய்துள்ளார். இதற்கு முன்னரும் இவர் வீட்டுக் கூரையிலிருந்து குதித்து, தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்' என்று மறணித்த பிரசாந்தின் அக்கா கணகரெத்னம் சிவஜோதி அழுதுகொண்டு தெரிவித்தார்.

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.எம்.நசீல், பொலிசார் சகிதம் வருகை தந்து தற்கொலை இடம்பெற்ற வீட்டுச் சாமியறையையும், தடயங்களையும் பார்வையிட்டதோடு, உறவினர்களினதும் வாக்கு மூலங்களையும் பதிவு செய்தார். பின்னர் சடலம் வைக்கப்பட்டுள்ள சாய்ந்தமருது வைத்தியசாலைக்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.  










Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.