பல இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மன்னார் பேசாலை பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.மன்னார் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் சயந்த பீரிஸ் பணிப்புரைக்கமைவாக பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.டீ.எம்.சிறில் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட வீதி தடுப்பு சோதனையின் போது பேசாலை கள்ளியடிப்பாடு பகுதியில் கொழும்பு நோக்கி புறப்பட்டுச்சென்ற தனியார் பஸ் ஒன்றில் இரவு 10 மணியளிவில் சோதனை மேற்கொண்ட போது கேரள கஞ்சா 21.450 கிலோ கிராம் அதனைக்கொண்டு சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டு சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 3340 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.சந்தேக நப் பொலிசாரின் கண்காணிப்பில் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள துடன் மேதலதிக விசாரணையை பேசாலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment