சர்வதேச சுனாமி ஒத்திகை நிகழ்வு இன்று நிந்தவூரிலும் இடம் பெற்றது.

                      ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
உலக சுனாமி அனர்த்த விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்களை விழிப்புணர்வூட்டும் சுனாமி அனர்த்த ஒத்திகை நிகழ்வு நேற்று நிந்தவூர்ப் பிரதேசத்திலும் இடம் பெற்றது.

நிந்தவூர்ப் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் ரி.எம்.எம்.அன்சார், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், விசேட அதிரடிப்படையினர், பொலிசார் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சுனாமி போன்ற திடீர் அனர்த்தங்களின் போது மக்கள் எவ்வாறு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வது? தன்;னுடையதும், ஏனையவர்களதும் உயிர்கள், முக்கியமான பொருட்களை எவ்வாறு பாதுகாப்பது? பாதுகாப்பான இடங்களுக்கு சென்றதும் தமது விபரங்களை எவ்வாறு அரச அதிகாரிகளுக்கு அறிவிப்பது?  போன்ற பயனுள்ள விடயங்கள்  பல இந்நிகழ்வில்  மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும் என எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். 









Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.