நிந்தவூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக சம்மாந்துறை சலீம் கடமைப் பொறுப்புக்களை ஏற்றார்.

                  ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.ஏ.சலீம் கடமைப் பொறுப்புக்களை ஏற்றார்.

2017.11.22ந் திகதி தமது கடமைப் பொறுப்புக்களை நிந்தவூர் பிரதேச சபையில் ஏற்றுக் கொண்ட சலீம் கல்முனைக் வலயக் கல்விக் காரியாலயத்திலும்,  சம்மாந்துறை வலயக் கல்விக் காரியாலயத்திலும்  நிருவாக உத்தியோகத்தராகவும், அதன் பின்னர் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளராகவும் பணியாற்றினார்.

இவர் தமது காரியாலயக் கடமைகளில் மிகவும், நேர்மையாகவும், பண்பாகவும், மனிதநேயத்துடனும் பொதுமக்கள் விடயங்களில் எப்போதும் புன்னகை பூத்தமுகத்துடன் பழகி அவர்களது பிரச்சினைகளை உடனுக்குடன் முடித்து வைப்பதில் ஆர்வம் கொண்டவர். 

தமது காரியாலய உத்தியோகத்தர்களுடன் மிகவும் சினேகபூர்வமாக நடந்து கொள்ளும் செயலர் சலீம் மக்கள் குறைகளை அறிந்து, நிவர்த்தி செய்வதற்கு தரகர் எவருமின்றிப் பணியாற்றும் வல்லமை கொண்டவர். என்பதால் மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள எந்தத் தரகரின் உதவிகளுமின்றி செயலாளர் சலீமை நேரடியாகச் சந்திக்க முடியும்! 





Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.