(அப்துல்சலாம் யாசீம்)
ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வெவ்வேறு இடங்களில் அனுமதிப்பத்திரமின்றி தேக்கு மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற இரண்டு லொறிகளுடன் 150 தேக்கு மரக்குற்றிகளையும் ஜந்து சந்தேக நபர்களையும் நேற்றிரவு கைது செய்துள்ளதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொரவ்பொத்தானை சுஹதகம பகுதியிலிருந்து ஏறாவூர் பிரதேசத்திற்கு 50 தேக்கு மரக்குற்றிகளை ஏற்றிச்செல்லும் போது பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பை மேற்கொண்ட வேளை லொறியுடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ததாகவும் மேலும் ஹொரவ்பொத்தானை மதவாச்சி சந்தியிலிருந்து தலாவ பிரதேசத்திற்கு லொறியொன்றில் 100 தேக்கு மரக்குற்றிகளை ஏற்றிச்செல்லும் போது மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஏறாவூர்- கம்பிரிகஸ்வெவ-தலாவ பகுதிகளைச்சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்றைய தினம் கெப்பித்திகொள்ளாவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment