நிந்தவூர் கடற்கரைப் பிரதேசங்களை சுத்தப்படுத்தும் நிகழ்வு.


                 -மாகாண சபை உறுப்பினர் ஆரீப் சம்சுதீன் பிரதம அதிதி-
                       ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
சர்வதேச கடற்கரையோரச் சுத்தப்படுத்துகை தினம், மற்றும் தேசிய கடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் வாரம் ஆகியவற்றை முன்னிட்டு நிந்தவூர் பிரதேச சபையும், நிந்தவூர் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய சுத்தப்படுத்தும் நிகழ்வு நேற்று நிந்தவூர் கடற்கரைப் பூங்கா பிரதேசத்தில் இடம்பெற்றது.

நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் பிரதேச சபை செயலாளர் எம்.எம்.முஹம்மட், மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பாடசாலை மாணவர்கள், அதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.













News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.