உண்மைகள் உறங்குவதில்லை

                            -எம்.சஹாப்தீன்-
தலைவர் எந்த முடிவினை எடுப்பதாக இருந்தாலும் அவர் கட்சியின் உயர்பீடத்திடம் கேட்க வேண்டியதில்லை. இதுதான் 2015ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட யாப்பின் நிலையாகும். 
2015இல் உருவாக்கப்பட்ட யாப்பின் படி கட்சியின் செயலாளராக ஒருவரை தலைவர் நினைத்தால் நியமிக்கவும் முடியும். நீக்கவும் முடியும். அவர் மன்சூர் ஏ.காதரை நியமிக்க நினைத்தார் நியமித்தார். நீக்க வேண்டுமென்று எண்ணினார் நீக்கினார். நிஸாம் காாியப்பரை நியமிக்க எண்ணங் கொண்டார் நியமித்தார். இதுதான் மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம் பெற்றுள்ள அதிகாரம். இந்த அதிகாரத்தை கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் அஸ்ரப் கூட கொண்டிருக்கவில்லை.
மேலும், அதிகாரமில்லாத ஒரு பதவியைத்தான் இவ்வாறு நினைத்த மாத்திரத்தில் நீக்கவும், நியமிக்கவும் இயலும்.
மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம்தான் முஸ்லிம் காங்கிரஸின் அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருப்பார். அவர் சர்வதிகாாி போன்று செயற்படுவார் என்று 2015இல் மு.காவின் யாப்பு திருத்தப்பட்ட போது நாம் சொன்னோம். எழுதினோம். அன்று ஹஸன்அலி கூட இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. 
கண்டியில் நடந்த பேராளர் மாநாட்டில் பசீர் சேகுதாவூத்திடமும், ஹஸன்அலியிடமும், நிஸாம் காாியப்பாிடமும் சொன்னோம். மாகாண சபை உறுப்பினர் ஜவாத்திடமும் எடுத்துக் கூறினோம். யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. தலைமைத்துவ விசுவாசம் அவர்களை மயக்கத்தில் வைத்திருந்தது. ஈற்றில் மு.காவின் புதிய யாப்பில் உள்ள ஆபத்து குறித்து எழுதினோம். கட்சியின் ஆதரவாளர்கள் கூட நம்பவில்லை. அல்லாஹ் போதுமானவன். கட்சியின் தலைவர் நினைத்தால் செயலாளரை நீக்கலாம். அவர் விரும்பியவரை நியமிக்கலாம் என்று நாம் சொன்னது உண்மையாகியுள்ளது.
உண்மைகள் நீண்ட காலம் உறங்குவதில்லை. உண்மை தன்னை உறங்க வைத்தவர்களுக்கு தொியாமலேயே விழித்துக் கொள்ளும். முஸ்லிம் காங்கிரஸ் என்றால் தலைவர். அவர்தான் எல்லாம். இந்நிலை மாற வேண்டும். எல்லாம் அவர் எனும் நிலைதான் சர்வதிகாரம்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.