சமூக வலுவூட்டல், நலன்புரி, நலநோன்புகை, மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சின் கீழுள்ள தேசிய உளவளத்துணை செயலகமும், அம்பாரை மாவட்ட செயலகமும் இணைந்து அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு நடாத்திய 'உளவளத்துணையும், ஊடகச் செயலமர்வும்' எனும் தலைப்பிலான ஒரு நாள் செயலமர்வு நேற்று அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் மாவட்ட உளவளத்துணை இணைப்பாளர் ஏ.ஏ.தீன் முஹம்மது, உளவளத்துணை உதவியாளர் ஜறூன் சரீப், பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகத்தர் எஸ்.ஆப்தீன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அம்பாரை மாவட்டத்திலுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு, பயன்பெற்றனர்.
பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'ஊடகவியலாளர்களுக்கு உளவளத்துணையின் பங்களிப்பும், உளவளத்துணைக்கு ஊடகவியலாளர்களின் பங்களிப்பும் ஒன்றுக்கொண்று இன்றியமையாததாகக் காணப்படுகிறது. எனவே, ஊடகவியலாளர்களும், உளவளத்துணையாளர்களும் புரிந்துணர்வுடன் செயற்படவேண்டியது காலத்தின் தேவையாகும்' எனத் தெரிவித்தார்.









Post a Comment