பொத்துவில் ஜனாசா நலன்புரி சங்கத்திற்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களினால் ஐந்து லட்சம் நிதி உதவி

                     (சியாத் அகமட் லெப்பை)
ஜனாசாவை கொண்டு செல்வது தொடர்பான ஐனாசா வாகனம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்கு பொத்துவில் ஜனாசா நலன்புரி சங்கத்தினால் பல வருடங்களாக ஊர் பொது மக்கள் சார்பாக நிதி உதவிகள் திறட்டப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக சட்டத்தரணி S.A முனாஸுதீன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களினால் வாக்குறுதி அளிக்கப்பட்ட பொத்துவில் பிரதேசத்திற்கான ஜனாஸா வாகனக் கொள்வனவிற்காக தனது சொந்த நிதியின் மூலம் ஐந்து லட்சம் ரூபாய்க்கான S.A முனாஸுதீன் அவர்களின் காசோலையொன்று வழங்கப்பட்டிருந்தது.


குறித்த நிதி உதவிக்கான காசோலை நேற்றைய தினம் (02.09.2017) சனிக்கிழமை சட்டத்தரணி காரியாலயத்தில் வைத்து சங்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் பொத்துவில் உலமாக்கள் ஆகியோரிடம் S.A முனாஸுதீன் அவர்களினால் கையளிக்கப்பட்டது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.