உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதற்கு மேற்கொள்ளப்படவுள்ள மூன்று திருத்தச் சட்ட மூலங்களை நிறைவேற்றுவதற்காக எதிர்வரும் 26 ஆம் திகதி விசேட பாராளுமன்ற அமர்வொன்று நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, எதிர்வரும் 26 ஆம் திகதி 1.00 மணி முதல் 7.30 மணி வரையில் மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை என்பன தொடர்பிலான ஒழுங்கு விதிகள் சட்ட மூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, ஒக்டோபர் 03 ஆம் திகதி மற்றும் 09 ஆம் திகதி என்பவற்றிலும் விசேடமாக பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Post a Comment