- தலைமைத்துவ வழிகாட்டலின் சிறப்பு என கல்வியலாளர்கள் பாராட்டு –
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் அல்-மினா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றி, அண்மையில் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற சிரேஷ்ட ஆசிரியர் எம்.எஸ்.ஜிதார்தீன் அவர்களது சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் பிரியாவிடை வைபவம் நேற்று அல்-மினா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
வித்தியாலய அதிபர் எம்.எல்.எம்.நிஹார்தீன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதி அதிபர் ஏ.எஸ்.றியாஸ் அஹமத் உட்பட அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டு, சிறப்பித்தனர்.
இங்கு பிரியாவிடை பெற்ற சிரேஷ்ட ஆசிரியர்> கல்வியலாளர் ஜிதார்தீன் கருத்துத் தெரிவிக்கையில்:- 'நாங்கள் கடந்த காலங்களில் பல பாடசாலைகளில் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளோம். அப்பாடசாலைகள் எல்லாவற்றிலும் இவ்வாறான நன்றியுணர்வுள்ள நிகழ்வுகளைக் காணமுடிவதில்லை. சிலருக்கு பாராட்டு நிகழ்வு நடைபெறும். பலருக்கு அது நடைபெறாது. இதனால் வேதனைகளை வெளியிடுகின்ற அதிகமான ஆசிரியர்> கல்வி அதிகாரிகளின் மனக் குமுறல்களை நான் அறிந்துள்ளேன். இருந்தாலும் இப்பாடசாலையில் இந்த நன்றியுணர்வை மதிக்கின்ற நல்ல செயற்பாடுகள் இப்பாடசாலையின் ஆரம்ப காலந் தொட்டே கடமையில் இருந்த அதிபர்கள் ஒருவர் பின் ஒருவராகப் பின்பற்றி வந்திருப்பதை நான் அறிகின்றேன். அந்த நடைமுறையின் வழியே இன்றைய தலைமையின் வழிகாட்டலில் செயற்படுகின்ற ஆசிரியர் குழாத்தையும்> அவர்களது ஒற்றுமையையும் பாராட்டாமல் இருக்க முடியாது. இது போன்ற நல்ல பண்புகளையும்> பழக்க வழக்கங்களையும் ஏனைய பாடசாலைகளும் பின்பற்றுவது காலத்தின் தேவையென நான் கருதுகிறேன்' எனத் தெரிவித்தார்.







Post a Comment