( ஏ.ஆர்.அபி அஹமட் )
நிந்தவூர்ப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஹிவ்சோ, பர்ஸானா, அல்-அஸ்ஹர், அல்-மதீனா, அல்-மதீஹா போன்ற பாலர் பாடசாலைகளில் பராமரிக்கப்பட்டு வரும் பாலர்களின் பெற்றோர்கள், பாதுகாவலர்களுக்கான செயன்முறைப் பயிற்சிப் பட்டறையொன்று நேற்று ஹிவ்சோ பாலர் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நிந்தவூர் பிரதேச செயலக சிறுவர் நன்நடத்தைப் பராமரிப்புப் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு அம்பாரை மாவட்ட சிறுவர் நன்நடத்தை, பராமரிப்பு சம்மேளனத் தலைவரும், பாலர் பாடசாலைகளின் முகாமைத்துவப் பணிப்பாளருமான ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் தலைமையில் இடம்பெற்றது.
இதில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தரும், சிறுவர் நன்நடத்தை திணைக்கள வளவாளருமான கே.திலங்கேஸ்வரன், நிந்தவூர் பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உதவியாளர் எஸ்.எல் சபுறுல் ஹஸீனா ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு ' பாலர்களைச் சிறந்த முறையில் பராமரித்துப் பாதுகாப்பதில் பெற்றோருக்குள்ள கடமைகளும், பொறுப்புக்களும் ' எனும் தலைப்பில் உரையாடல்களையும், செயன்முறைப் பயிற்சிகளையும் வழங்கிச் சிறப்பித்தனர்.








Post a Comment