அட்டாளைச்சேனை பாடசாலையொன்றில் அதிபர் ஆசிரியர் மோதல்- வைத்தியசாலையில் அனுமதி



அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலையொன்றில் அதிபர் ஆசிரியர் இருவருக்கிடையில் இன்று காலை ஏற்பட்ட கைகலப்பில் இரண்டு நபர்களும் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில் கடமையாற்றும் கணிதபாட ஆசிரியர் பாடசாலைக்கு சமூகமளித்து வரவுப் பதிவேட்டில் ஒப்பமிட முயன்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

கணித பாட ஆசிரியர் குறித்த நேரத்திற்கு பாடசாலைக்கு சமூகம் கொடுக்காமல் காலதாமதமாக வருகை தந்ததாகவும் தினவரவு புத்தகத்தில் ஒப்பமிட முயன்ற வேளை அதிபர் ஒப்பமிடுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர்.தாக்குதலுக்கு உள்ளான கணித ஆசிரியர் அக்கரைப்பற்று வைத்தியசாலையிலும் தாக்குதலுக்கு உள்ளான அதிபர் அட்டாளைச்சேனை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இப் பிரச்சினை தொடர்பாக இரண்டு நபர்களும் அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.அத்தோடு அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிமனையின் குழுவொன்று குறித்த பாடசாலைக்கு விஜயம் மேற் கொண்டு  விசாரணைகளை மேற் கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.