நிந்தவூரில் ஊடகவியலாளர், மௌலவி, உட்பட நால்வருக்கு கொலை அச்சுறுத்தல்!

-அதிபர் ஒருவரது காட்டுத் தருபார் என மக்கள் விபரிப்பு-

(சல்மான் பாரீஸ் )
நிந்தவூரில் நேற்று(02) பனிரெண்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று ஊடகவியலாளர் ஒருவர், அதிபர் ஒருவர், பொதுப் பணியாளர்கள் இருவர்களின் வீடுகளுக்குச் சென்று இமாம் றூமி வித்தியாலய அதிபர் ஹாமீதின் ஊழல் விடயங்களில் தலையிடக் கூடாது என்றும், அவ்வாறு தலையிட்டால் வெட்டிக் கொல்லுவோம் என்றும் மிரட்டி, கொலை அச்சுறுத்தல் விடுத்துச் சென்றுள்ளனர்.

இவ்வாறு மிரட்டிய குழுவினர் நிந்தவூர் இமாம் றூமி வித்தியாலய அதிபர் ஏ.சீ.ஹாமீதின் மருமக்கள் என்றும், அவர் வீட்டில் திரட்டப்பட்டு அனுப்பப்பட்டவர்கள் என்றும், மிரட்டலில் ஈடுபட்டதன் பின்னர் அதிபர் ஹாமீதின் வீட்டில் மீண்டும் கூடிக் கூட்டம் நடத்தினார்களாம் என்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் சம்மாந்துறைப் பொலிசில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது:- 

நிந்தவூர் இமாம் றூமி வித்தியாலய அதிபர் ஏ.சீ.ஹாமீது என்பவர் மேற்படி பாடசாலைக்கு வந்த காலந்தொட்டு இங்கு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு, ஆண்டு 01ல் புதிய மாணவர்களைச் சேர்த்தலில் பணம் வசூலித்தல், மின்சாரக் கட்டணம், மேலதிக வகுப்புகளுக்காக மாணவர்களிடம் பெறப்படும் பணம் என்று சட்டவிரோதமான பணஅறவீடுகள், ஒப்பந்தவேலைகளில் ஈடுபடுபவர்களிடமான இலஞ்ச எதிர்பார்ப்பு, பாடசாலையிலுள்ள வழங்களில் மோசடிகள் போன்ற பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், இது பற்றி பெற்றோர், பாடசாலை அபிவிருத்திச் சபையினர், குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் கல்வித் திணைக்கள அதிகாரிகளுக்கு அவ்வப்போது அறிவித்திருந்த போதிலும், அதிகாரிகள் இந்த அதிபருக்கு எதிராக எந்த விதமான நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லையாம். இதனால் இவர் தொடர்ந்தும் தைரியமாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றாராம். 

இதனால் கடந்த வருடம் இப்பாடசாலையில் கடமை புரிந்த சிரேஷ்ட ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஆசிரியர் ஒருவர் நட்புரீதியில் இந்த அதிபரைத் திருத்துவதற்குப் பலமுயற்சிகள் எடுத்தும், அது வெற்றியளிக்காததனால் இந்த அதிபர் பற்றிய 20 குற்றச்சாட்டுக்களை இலங்கை இலஞ்ச ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவிற்கு முறைப்படி அனுப்பியுள்ளார். இம்மனு ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, குறிப்பிட்ட அதிபருக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மனுதாரருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த அதிபர் சட்டப்படி எந்த வித முன்னனுமதியும் பெறாமல், பாடசாலை எல்லையினுள் நின்ற ஒரு பெரிய கூழா மரம், காய்த்துக் குலுங்கிய தென்னை மரம், பல வேம்பு மரங்கள், பல காயா மரங்கள் போன்றவற்றை கடந்த 2017 மே 05ந் திகதி வெட்டியதோடு, மே 25ந் திகதி திருட்டுத் தனமாக நிந்தவூர் மாந்தோட்டத்திலுள்ள தனியார் மரம் அரியும் ஆலைக்கு எடுத்துச் சென்ற போது பெற்றோர் வழங்கிய தகவலின் பிரகாரம் அக்கரைப்பற்று வனஇலாகா அதிகாரிகள் குறிப்பிட்ட மரஆலையிலிருந்து 12 வேம்பு மரக்குற்றிகளைக் கைப்பற்றிச் சென்றனர்.( இதற்கான படங்கள் உள்ளன).

இரண்டாவது தடவையாக ஜுன் 28ந் திகதி பாடசாலை வளவில் பதுக்கியும், பதுக்காமலும் காணப்பட்ட 03 பெரிய கூழா மரத்துண்டுகளும், ஒரு டிப்பர் வாகனம் நிறையுமளவிலான வேம்பு மரத்துண்டுகளும், கந்துகளுமாகச் சேர்த்து எல்லாவற்றையும் கைப்பற்றிய அம்பாரைப் பிராந்திய மரக்கூட்டுத்தாபன உயரதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்( இதற்கான படங்களும் உள்ளன)..

இந்தச் செய்திகள் இணையத்தளங்களிலும், முகங}ல்களிலும் வெளிவந்து கொண்டிருந்தமைக்குப் பதில் வழங்க முடியாமல், அல்லது உண்மைத்தன்மையை வெளியிட முடியாத அதிபர் ஹாமீது, தனது மருமக்கள் எனக்கூறி, 12 இளைஞர்களை, இச்செய்திகள் வெளியாகக் காரணமானவர்கள் எனச் சந்தேகிக்கும் ஊடகவியலாளரான ஆசிரியர், மௌலவியான அதிபர், இன்னும் இரண்டு பொதுப் பணியாளர்களின் வீடுகளுக்குச் சென்று அதட்டியும், பாடசாலையிலிருந்து வந்தவர்களை வளிமறித்து, 'எங்கள் மாமா இமாம் றூமி வித்தியாலய அதிபர் ஏ.சீ.ஹாமீதின் ஊழல் விடயங்களில் தலையிட்டால் வெட்டிக் கொல்லுவோம்' என கொலை அச்சுறுத்தல் விடுத்துமுள்ளனர்.

இதுபற்றிய முறைப்பாடுகள் நான்கு சம்மாந்துறைப் பொலிசில் பதியப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரனைகளைப் பொலிசார் தொடர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக குறிப்பிட்ட ஊடகவியலாளர், மௌலவி அதிபர், சமூக ஆர்வலர்கள் ஆகியோருடன் தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்களின் கருத்துக்களைக் கேட்டோம். அவர்கள் தமது அவசரமான வேலைகள் காரணமாக தற்போதைக்குக் கருத்துக்கள் வழங்க முடியாது. பின்னர் தருவதாகக் கூறியுள்ளனர். அவர்களது கருத்துக்கள் கிடைக்கும் போது தருவதற்குத் தயாராகவுள்ளோம்.


 

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.