நிந்தவூரில் விசேட சன்மார்க்க சொற்பொழிவும், இப்தார் நிகழ்வும்.

                  ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜூம்ஆப்பள்ளிவாசல் ஏற்பாட்டிலான விசேட சன்மார்க்க சொற்பொழிவும், இப்தார் நிகழ்வும் இன்று (11) நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரக் கல்லூரியில் இடம் பெற்றது.

ஷ்ஷெய்க் எம்.எச்.எம்.இத்ரீஸ் மௌலவி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் தாருல் ஹூதா அரபு, இஸ்லாமிய மகளீர் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாறக் மதனி அவர்கள் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு, 'இலக்கை நோக்கிய பயணம்' எனும் கருப் பொருளில் விசேட சொற்பொழிவும் நிகழ்த்தினார்.

அஷ்ஷெய்க் எம்.எல்.முபாறக் மதனி அவர்கள் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'அல்குர்ஆனையும், சுன்னாவையும், எவ்வாறு சஹாபாக்கள் விளங்கிக் கொண்டு செயற்பட்டார்களோ..அவ்வாறு நாமும் செயற்பட்டு, உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும். அதற்காகவே நாம் உண்மையாகப்பாடுபடுகிறோம்' எனத் தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்வில் சங்கைக்குரிய உலமாக்கள், கல்விமான்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பள்ளிவாசல்களின் தலைவர்கள், ஊர் தனவந்தர்கள், நலன்விரும்பிகள், சமூக சேவை அமைப்புக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 











Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.