( என்.சத்தியன் )
நிந்தவூரிற்கு யாசகந் தேடி வந்த சுமார் 60- 70 வயது மதிக்கத்தக்க வயோதிபத் தாய் ஒருவர் யாசகங் கேட்ட வீட்டிலேயே திடீரென மயங்கி விழுந்து, மரணித்துள்ளார்.
நிந்தவூர் பிரதான வீதிக்கருகிலுள்ள நீர் வழங்கல் அதிகார சபை பொறியியலாளரது வீட்டிலேயே இச்சம்பவம் நடந்துள்ளதாக அறிய முடிகிறது.
குறித்த வீட்டார் மரணித்த வயோதிபத் தாயை உடனடியாக நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சேர்த்த போது அவர் மரணித்து விட்டார் என்ற செய்தி அங்கு கடமையிலிருந்த வைத்திய அதிகாரியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்மாந்தறைப் பொலிசாருடன் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு சமூகமளித்த சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.எம்.நசீல் மரணித்த வயோதிபத்தாய் சம்பந்தமான விசாரணைகளை மேற் கொண்டதோடு, இவர் யார்? எங்குள்ளவர்? போன்ற விபரங்களை அறிந்து, உறவினர்களிடம் ஒப்படைக்கும் வரை பொருத்தமான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறைக்கு மாற்றுமாறு உத்தரவிட்டார்.
தற்போது சடலம் சம்மாந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்செய்திகளில் உள்ள படங்களைப் பார்த்து உறவினர்கள் சம்மாந்தறை வைத்தியசாலைக்கு வந்து சடலத்தைப் பொறுப்பேற்குமாறு சம்மாந்துறைப் பொலிசார் கோரிக்கை விடுக்கின்றனர்.
மரணித்தவர் கொண்டு வந்த பேக்கும் பக்கத்தில் உள்ளது. அதனுள் அடையாள அட்டை எதுவும் இருக்கவில்லை. ஆனால் ரூ.558.00 பணமும், கல்லடி, கல்லாறு போன்ற இடங்களுக்கு எடுக்கப்பட்ட இரு பஸ் பிரயாணச் சீட்டுக்கள் உள்ளன.







Post a Comment