( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாரை மாவட்ட சம்மேளனத்தின் விசேட இப்தார் நிகழ்வும், சம்மேளன உறுப்பினர் மர்ஹூம் எம்.ஐ.எம்.முஸ்தபாவுக்கான இரங்கல் நிகழ்வும் நேற்று (23) மாலை அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் உயாதரக் கல்லூரியில் இடம் பெற்றது.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் தேசியத் தலைவர் எம்.ஐ.உதுமாலெப்பை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் திருகோணமலை மாவட்ட நீதிபதி அஸ்சேஷ். அப்துல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஐ.அப்துல் கபூர், அம்பாரை மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஐ.எம்.தௌபீக் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மற்றும் உலமாக்கள், கல்விமான்கள், உள்ளுர் அரசியல் தலைவர்கள், விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், சமூக சேவை அமைப்பின் தலைவர்கள், ஊர்ப்பெரியார்கள், லீக் அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியில் சம்மேளனத்தின் ஆரம்ப கால உறுப்பினராகவும், ஆலோசகராகவும் இருந்து பணியாற்றி, அண்மையில் இறையடி சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும், அம்பாரை மாவட்ட சாரண ஆணையாளரும், ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் விரிவுரையாளருமான மர்ஹூம் எம்.ஐ.எம்.முஸ்தபா அவர்களுக்கான இரங்கலும், விசேட துஆப்பிரார்த்தனையும் இடம் பெற்றதைத் தொடர்ந்து, அவர் நினைவாக அச்சிடப்பட்டு, வெளியிடப்பட்ட 'யாசீன் குர்ஆன்' பிரதிகளும் வழங்கப்பட்டன.







Post a Comment