அடுத்த தாக்குதல் சவூதி அரேபியா மீது தான்; ஐ.எஸ் தீவிரவாதிகள் பகிரங்க மிரட்டல்

சிரியா, ஈரானை தொடர்ந்து சவுதி அரேபியாவிலும் தாக்குதல் நடத்தப்படும் என ஐ.எஸ் தீவிரவாதிகள் வீடியோ மூலம் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். ஈரானின் தெஹ்ரா நகரில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலில் 17 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.
இதனை தொடர்ந்து முகமூடி அணிந்த 5 பயங்கரவாதிகள் காணொளியில் தோன்றி, "ஈரானுக்கு பிறகு உங்களுக்கும் நேரம் வரும். உங்களை உங்கள் இடத்தில் வந்தே தாக்குவோம் என சவுதி அரேபியாவுக்கு மிரட்டல் விடுத்ததோடு, நாங்கள் யாருடைய கையாளும் இல்லை. இறைவனுக்கு கட்டுப்பட்டு, அவருடைய உத்தரவின் பெயரில் செயல்படுகிறோம். நாங்கள் மதத்திற்காகதான் போராடுகிறோம்" என்று கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து சவுதி அரேபியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுளது. அங்கு வாழும் மற்ற நாட்டவர்களையும் எச்சரிக்கையுடன் இருக்கும் படி சவுதி அரேபியா அறிவுறுத்தியுள்ளது.(VM)

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.