நிந்தவூர் நலன்புரிச் சபை ஏற்பாட்டிலான மாபெரும் இப்தார் நிகழ்வு நேற்று(04) மாலை நிந்தவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள வைத்தியசாலை வளாகத்தில் இடம் பெற்றது.
முன்னாள் இணைக்கப்பட்ட வட- கிழக்கு மாகாண சபைகளின் மாகாணக் கல்விப் பணிப்பாளரும், நிந்தவூர் நலன்புரிச் சபைத் தேசியத் தலைவருமான எம்.எச் யாகூப் ஹசன் தலைமையி;ல் இடம்பெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.எம்.நசீல், தென் கிழக்குப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.நசீர் அஹமட், லகான் விளையாட்டுக் கழகத் தலைவரும், சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான எம்.எல்.எம்.றபீக், அம்பாரை மாவட்ட தேசிய நீர் வழங்கல் பொறியியலாளர் ரி.இஸ்மாயில், நிந்தவூர் பிரதேச செயலக பதிவாளர் ஏ.பாயிஸ் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முன்னாள் நிந்தவூர் ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் சங்கைக்குரிய உலமா என்.இஸ்மத் மௌலவி விசேட அதிதியாகவும், விசேட சொற்பொழிவாளருமாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும், இந்நிகழ்வில் சங்கைக்குரிய உலமாக்கள், கல்விமான்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பள்ளிவாசல்களின் தலைவர்கள், சுகாதார சேவையினர், ஊர் தனவந்தர்கள், நலன்விரும்பிகள், சமூக சேவை அமைப்புக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சங்கைக்குரிய உலமா எம்.டபிள்யூ.அஸ்ஹர் மௌலவி அவர்களினால் விசேட துஆப்பிரார்த்தனையும் இடம் பெற்றது.









Post a Comment