பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு சமூக இணக்கப்பாடுகளுடன் தொடர்புடைய கற்பித்தல் உபகரணங்களைக் கையாளும் பயிற்சி நெறி.

                        ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகம், 'பிளான் சர்வதேச நிறுவனம்' ஊடாக 'யூனிசேப் நிறுவன' நிதியுதவியில் செயற்படுத்திவரும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை மூவின ஆசிரியர்களுக்கும் 'சமூக இணக்கப்பாடுகளுடன் தொடர்புடைய கற்பித்தல் உபகரணங்களைத் தாமாகத் தயாரித்து, அதனைப் பாலர் கற்பித்தலின் போது கையாளும் பயிற்சி நெறிகளை' வழங்கி வருகின்றது.

இதன் அடிப்படையில் அம்பாரை மாவட்ட பாலர் பாடசாiலை ஆசிரியர்கள் 110 பேருக்கான பயிற்சி நெறிகளும், அதற்கான உபகரணப் பொதிகளும் வழங்கும் நிகழ்வு நேற்று சாய்ந்தமருது, அல்-ஹிலால் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

அம்பாரை மாவட்ட பாலர் பாடசாiலைக் கல்விப் பணியகத்தின் செயலாற்றுப் பணிப்பாளர் எம்.எஸ்.சுபையீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, ஆசிரியர்களுக்கான பொதிகளை வழங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் பிளான் சர்வதேச நிறுவனத்தின் அம்பாரை மாவட்ட செயற்திட்ட இணைப்பாளர் எஸ்.இரவிச்சந்திரன், அம்பாரை மாவட்ட பாலர் பாடசாiலைக் கல்விப் பணியகத்தின் வெளிக்கள உத்தியோகத்தர்களான அஸ்சேஷ்.ஐ.எல்.எம்.அனீஸ், எஸ்.எம்.றிசான், ஆர்.எம்.றியாஸ், திருமதி.சூரிய கலா ஆகியோருடன், வளவாளர்களாக திருமதி.புஸ்பா குகாநிதி, திருமதி.சாந்தினிதேவி துரைராஜசிங்கம், திருமதி.சாமந்தி ஜெயகிறிஸ்னன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- ' கிழக்கு மாகாணத்திலுள்ள பாலர் பாடசாலை ஆசிரியர்களை சிறந்த நற்பண்புகளுடன் கூடிய ஒழுக்கமும், ஆளுமைப் பண்புகள் நிறைந்ததும், போதிய கல்வித்தகைமையுடையோராகவும், நுண்ணிய அறிவுடையோராகவும் மாற்றியமைப்பதே எமது நோக்கமாகும். அந்த வகையில் கிழக்கு மாகாணத்திலுள்ள 1863 பாலர் பாடசாலைகளில் 760 பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு இப்பயிற்சியை வழங்கியுள்ளோம். ஏனைய பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கும் விரைவில் இப்பயிற்சியை வழங்கவுள்ளோம்' எனத் தெரிவித்தார். 














Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.