நிந்தவூரில் "ஹதியா வாங்குவதற்காக வீடொன்றுக்கு சென்ற சுமார் 60,70. வயது மதிக்கத்தக்க பெண் ஒடுவர் திடீர் மரணமடைந்துள்ளார்.
நபர் நிந்தவூர் பிரதான வீதியிலுள்ள வீடுகளில் ஹதியா வாங்கிச் சென்றுகொண்டிருந்த வேளையில் நிந்தவூர் பிரதான வீதியிலுள்ள நிந்தவூர் நீர் வழங்கல் அதிபார சபை பொறுப்பதிகாரி யூ.எல்.எம்.சுஹைப் பொறியியலாளரின் வீட்டிலேயே இந்த வயோதிபர் ஹதியா எடுக்கச் சென்றபோது மயங்கி விழுந்து மறணித்துள்ளதாகத் தெரியவருகிறது. அவ்வீட்டவர்கள் உடனே நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது மறணமடைந்து விட்டதாக வைத்தியர்கள்
தெரிவிக்கின்றனர்.
மேலும் மரணமடைந்த பெண் யாரென்று இனங்காணப்படவில்லை குறிப்பாக இவர் நிந்தவூரைச் சேந்தவரல்லவென கூறப்பட்டுகின்ற போதிலும் இவர் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவராக இருக்கலாமென சில அடையாளங்களை வைத்து வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன.
சுமார் 60-70 வயது மதிக்கத்தக்க இந்த பெண் வயோதிபரின் சடலம் தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவரது இரு காதுகளிலும் இரண்டு தோடுகள் காணப்படுகின்றன. இவர் கறுப்பு நிற அக்கோபா சட்டை அணிந்துள்ளார். மெல்லிய றோஸ் நிறத்திலான பாவாடையும், பல நிறங்களையுடைய சாரியும் அணிந்துள்ளார். சாரியில் நீலநிறப் பூக்களும், நாவல் கோடுகளும் காணப்படுகின்றன. இவரது கைப்பையில் அடையாள அட்டை எதுவும் இல்லை. ஆனால் கல்லடிக்கு எடுக்கப்பட்ட 2 பஸ் பிரயாணச் சிட்டைகளும், ரூபாய் 558.00 பணமும் காணப்படுவதாக சம்மாந்துறைப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
எனவே, இவைகளை வைத்து இவர் ஒரு இந்துப் பெண்ணாக இருக்குமோ எனச் சந்தேகப்படுகின்றனர். எனவே மேலுள்ள அடையாளங்களை வைத்து உறவினர்கள் யாரும் சந்தேகங் கொண்டால் நேரடியாக நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு வந்து சடலத்தை இனங்காட்டுமாறு கேட்கப்படுகின்றனர்.

Post a Comment