முன்னாள் பிரதேச சபை எதிர் கட்சித்தலைவர் சுலைமான் முயற்சியில் நிந்தவூரில் 1000 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நடமாடும் சேவை நிகழ்வு.


                           ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் டைடான் விளையாட்டுக் கழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க நிந்தவூர் பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும், எதிர்க் கட்சித் தலைவருமான வை.எல் சுலைமாலெப்பையின் முயற்சியினால் சமூக வலுவூட்டல் அமைச்சின் நிதிஒதுக்கீட்டில் நிந்தவூர் பிரதேச மக்கள் 1000 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நடமாடும் சேவை நிகழ்வு நேற்று நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் சமூக வலுவூட்டல் அமைச்சின் அம்பாரை மாவட்டத்திற்கான பணிப்பாளர் எஸ்.சந்துரூபன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அவர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'சகோதரர் சுலைமான் போன்றவர்களின் நல்லெண்ண முயற்சிகள் காரணமாகவே இன்று இந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்படுகின்றன. இந்த நல்லெண்ணம் எல்லோருக்கும் வருவதில்லை. எனவே, சுலைமான் போன்றவர்களைப் பாராட்ட வேண்டும்.' எனத் தெரிவித்தார்.

இங்கு வை.எல் சுலைமாலெப்பை கருத்துத் தெரிவிக்கையில்:- ' ஏழைக் குடும்பத்தில் பிறந்து இன்று நாட்டை ஆழுகின்ற அளவு முன்னேற்றம் அடைந்துள்ள எமது அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிகேன அவர்கள் இன்று அதிகமாக ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற வேண்டுமென்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அவர்களின் முயற்சிகள் வெற்றியடைய நாம் என்றும் பிரார்த்தனை புரிவோம்' எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டு, யாரும் ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்லாது, பயன்பெற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.











Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.