ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அவசர உயர்பீடக் கூட்டம் இன்றிரவு (11) நடைபெற்ற போது நாளைய (12) பேராளர் மகாநாட்டில் பரிந்துரை செய்து ஏற்றுக் கொள்வதற்கான புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெற்றது.
இதன்போது, கட்சியின் தவிசாளர் பதவிக்கு எம்.ரி. ஹஸன் அலியின் பெயர் உயர்பீட உறுப்பினர்கள் பலரால் முன்வைக்கப்பட்ட நிலையில், அந்தப் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ஹஸன் அலி முற்றாக மறுத்து, நிராகரித்திருந்தார்
இந்த நிலையில்,அதிகாரமிக்க செயலாளர் பொறுப்பை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்தும் மன்சூர் ஏ காதரே அதிகாரபூர்வ செயலாளராக செயற்படுவார் என தீர்மானிக்கப்பட்டது.
இதனையடுத்து, தான் கட்சிக்கு எப்போதும் விசுவாசமாக இருக்கப் போவதாகவும் தனக்கு எவ்வித பதவிகளும் இனித் தேவை இல்லை எனவும் தெரிவித்து இறுதிக் கட்டத்தில் ஹஸன் அலி அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
உயர்பீட கூட்டத்தை முடித்துக்கொண்ட தலைவர் ஹக்கீம் உள்ளிட மு கா முக்கியஸ்தர்கள் 20 பேர் வரை ஹசன் அலி அவர்களின் வீட்டிற்கு படையெடுத்துள்ளதாகவும் அங்கு சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Post a Comment