தாருஸ்ஸலாம் பற்றிய மற்றுமொரு அதிர்ச்சி தகவல்!


தாருஸ்ஸலாம், மறைக்கப்பட்ட மர்மங்கள் என்ற புத்தகம் எங்கள் கைக்கும் கிடைத்திருந்தது... அதனை முற்றுமுழுதாக வாசித்துப்பார்த்தால், அதில் பல விடயங்களை அறியக்கூடியதாக இருந்தது.

அந்த புத்தகத்தில் பல ஆவணங்களை ஆதாரமாக குறிப்பட்டு, அதனூடாக சிலபேரை, பெயர் குறிப்பிட்டு குற்றவாளிகளாக இனம்காட்டியும் உள்ளது.

அந்த இனம்காட்டப்பட்ட நபர்கள், ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய புள்ளிகள் மட்டுமல்ல, அந்த கட்சியின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்களை, அங்குலம் அங்குலமாக நேசிப்பவர்கள் நாங்கள் என்று இன்றுவரை இனம்காட்டிக்கொண்டிருப்பவர்கள் ஆவார்கள்.

அவர்களுக்கு எதிராகத்தான் இந்த புத்தகம் பேசுகின்றது, பேசுவது மட்டுமல்ல, பல ஆவணங்களையும் அவர்கள் அதில் ஆதாரமாக பதிவேற்றமும் செய்துள்ளார்கள்.

அந்த புத்தகத்தில் குறிப்பிடப்படும் விடயங்கள் உண்மையாக இருந்தால், அதில் குறிப்படபடும் நபர்கள், பாரிய துரோகிகளாகத்தான் இருப்பார்கள் என்பதில், மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

அந்த புத்தகத்தின் கூற்றுப்படி, மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களுக்கும், அவருடைய மனைவிக்கும், அவருடைய மகனுக்கும், அவருடைய கட்சிக்கும், அந்த கட்சியை நம்பி வாக்களிக்கும் மக்களுக்கும், பெரியதொரு மோசடியை செய்துள்ளார்கள் என்றுதான் என்னத் தோன்றுகிறது.

ஆகவே, இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் பிரபல்யமானவர்களாக இருப்பதனால், இந்த புத்தகத்துக்கு கட்டாயம் அவர்கள் பதில் புத்தகம் வெளியிட்டே ஆகவேண்டும்.

அந்த புத்தகத்தில் காட்டப்பட்டுள்ள ஆவணங்கள் பொய்யானதாகவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் சோடிக்கப்பட்டதாகவும் இருந்தால், குறிப்பிட்ட புத்தகத்துக்கு எதிராகவும், அதனை தயாரித்தவர்களுக்கு எதிராகவும், சகல வழிகளிலும் நடவடிக்கை எடுத்து, அவர்களின் பொய் முகத்தை கிழித்து எறிவதற்கு, அந்த புத்தகத்தினூடாக குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் முன்வர வேண்டும்.

அப்படி அவர்கள் பதிலளிக்க முன்வராமல் அலட்சியப்படுத்தினார்கள் என்றால், அதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் உண்மைதான் என்று அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள் என்பதாகவே அர்த்தமாகிவிடும்.

இந்த புத்தகத்தின்படி, ஆவணங்கள் அனைத்தும் பொய்யானவை, எங்களிடம் இருப்பதே உண்மையான ஆவணங்கள் என்று அவர்கள் பகிரங்கப்படுத்த முன்வர வேண்டும், ஏனென்றால் இந்த கட்சியையும், அதற்குறிய ஆவணங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் இவர்கள்தான்.

மர்ஹும் அஸ்ரப் அவர்களின் மரணத்தில் பலபேருக்கு அதிர்ஸ்டம் அடித்துள்ளது, உதட்டளவில் அவருக்கு துக்கத்தை தெறிவித்துவிட்டு, உள்ளத்தளவில் மகிழ்ச்சியான என்னம் கொண்டவர்களாக சிலபேர் நடந்து கொள்கின்றார்கள்.
மர்ஹும் அஸ்ரப் அவர்கள், தனது கட்சியையும், முஸ்லிம்மக்களையும் நேசித்தது போல் தன் மனையையும், மகனையும் மிகவும் நேசித்தவராவார்.

சந்திரிக்கா அம்மையாருக்கு அஸ்ரப் அவர்கள், தன் கைப்பட எழுதின கடிதத்தில் (அஸ்ரப்பின் அந்த ஏழு நாட்கள் புத்தகத்தின் 86ம் பக்கத்தை பார்க்கவும்) இந்த கட்சியை பாதுகாக்க தனது மனைவி பேரியல் பட்ட கஸ்டங்களை குறிப்பிட்டு, மகன் அமானின் எதிர்காலத்தை பற்றியும் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.

அப்படி அவர் நேசித்த மனைவியையும், மகனையும், அவர்வழத்த கட்சியை விட்டு தூரமாக்கிவைக்க எவ்வளவோ அபாண்டங்களை அவர்களின் மேல் செலுத்தினார்கள், அவர் நேசித்த மக்களை கொண்டே தன் மனைவியையும், மகனையும் தூசித்து பேசுவதற்கு ஆளாக்கினார்கள் என்பதை நடுநிலை வாதிகள் மறுக்கமாட்டார்கள்.

உண்மையிலேயே அஸ்ரப் அவர்களுக்கு இவர்களின் நடவடிக்கைகள் கபுர் வாழ்க்கை வாழும் அவருக்கு எடுத்துக்காட்டப்பட்டால் நிச்சயமாக அவர் இவர்களை சபிக்காமல் விடமாட்டார்.
பதவி பட்டங்களுக்காகவும், பணத்துக்காகவும் நீங்கள் செய்யும் அநியாயங்களை நிச்சயமாக இறைவன் மன்னிக்கமாட்டான்.

ஆகவே இந்த புத்தகத்தினூடாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மிகவிரைவில் உறியவர்களினால் பதில் அளிக்கப்படும் என்று நினைக்கின்றோம், அவர்களின் பதில்களின் உண்மைத்தண்மையை பொறுத்து, இவர்கள் யார் என்று முடிவு செய்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று நினைக்கின்றோம்.
ஸ்ரீ்.ல. முஸ்லிம் காங்கிரஸ் என்பது மக்களின் சொத்து, அதனை தன்னுடைய சொத்தாக எடுத்துக்கொண்டு கொள்ளையடிப்பதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அந்த கட்சியினுடைய அபிமானிகள், உண்மையான போராளிகள் யாரும் இப்போது அந்த கட்சியில் குறைந்து விட்டார்கள், அப்படியிருக்கும் ஒருசில பேரினாலும் இதனை தட்டிக்கேட்க முடியாத நிலைதான் காணப்படுகின்றது.

அஸ்ரப் இந்த கட்சியை ஆரம்பிக்கும் போது கடும் எதிர்ப்பு தெறிவித்தவர்களின் வாரிசிகளும், கோடாரிக்காம்பாக செயல்பட்டவர்களும்தான் இப்போது கட்சியில் பெரிய ஆக்களாக உள்ளார்கள்.

அதனை கஸ்டப்பட்டு வளர்த்தவர்கள் நிறையப்பேர் "குறங்கிடம் அப்பத்தை பறிகொடுத்தவர்கள் போல்"ஏமாந்து வீதியில் நிற்கின்றார்கள்.

ஆகவே, உண்மை என்றாவது ஒருநாள் வெளியாகித்தான் ஆகும்...அப்போது இறைவன் உயிரோடுதான் இருக்கின்றான் என்பது அவர்களுக்கு தெளிவாகித்தான் ஆகும்.....

எம்.எச்.எம்.இப்ராஹிம்...
கல்முனை...









Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.