நிந்தவூர் பிரதேச செயலக கலாச்சார விழா.

   -பிரதியமைச்சர் பைசால் காசீம் பிரதம அதிதி-

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் பிரதேச செயலக கலாச்சார விழா நேற்று மாலை நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயாதர பாடசாலையில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன், அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஸ்சேஹ்.எம்.ஐ.எம்.அமீர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவை முன்னிட்டு 'பனிச்சம்' எனும் பெயரில் நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.

முஸ்லிம், தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் தொண்மை வாய்ந்த கலை, கலாச்சாரப் பண்பாட்டு நிகழ்ச்சிகள் பலவும் மேடையேற்றப்பட்டன.

நிந்தவூர்ப் பிரதேசத்தில் தொண்மை வாய்ந்த கலை, கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாத்து வருபவர்களுக்கு அதிதிகளால் பொன்னாடை போற்றிக் கௌரவிக்கப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் கலாபூசனம்.செய்யது ஹசன் மௌலானா தலைமையிலான கவியரங்கொன்றும் இடம் பெற்றது.

பிரதியமைச்சர் பைசால் காசீம் பேசுகையில்:- ' நமது முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த பழமை வாய்ந் கலை,கலாச்சாரப் பண்பாட்டு நிகழ்ச்சிகளை அழிந்து விடாது பேணிப் பாதுகாப்பது நமது கடமையாகும்' என்று கருத்துத் தெரிவித்தார்.



















News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.