வில்பத்து வனத்தை விரிவுபடுத்துமாறும், அதனை வனஜீவிகள் பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமை மறிச்சுக்கட்டியில் வாழும் முஸ்லிம்களின் பூர்வீக காணிகளை அரசாங்கம் அபகரிக்கும் முயற்சியே இது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது பிழையான முடிவினை மாற்றிக்கொள்ளாவிட்டால் பதவிகளைத் தூக்கி எறிந்து விட்டு முஸ்லிம்கள் சார்பில் ஐக்கிய நாடுகள் சபை வரை சென்று நீதி கேட்பதற்கு தயாராக இருக்கிறேன் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
ஞானசார தேரர், ஆனந்த சாகர தேரர் போன்ற இனவாதிகளுடன் ஜனாதிபதி கைகோர்த்திருப்பது முஸ்லிம்களை சந்தேகத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்வாறான தேரர்களும் இனவாத சூழலியலாளர்களும் சில இனவாத ஊடகங்களும் ஜனாதிபதியைத் தவறாக வழி நடத்தி வருகின்றன.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வந்தால் எமக்கு விடிவு கிடைக்கும், நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த முஸ்லிம்களை ஜனாதிபதி தொடர்ந்து ஏமாற்றி வருகிறார் எனவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.

Post a Comment