-கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் பிரதம அதிதி-
( ஏ.எல்.ஏ.றபீக்பிர்தௌஸ் )
நல்லாட்சி அரசின் இரண்டாண்டு நிறைவை முன்னிட்டு, நல்லாட்சி நாயகர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்கரமசிங்கவிற்கும், நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி விசேட துஆப் பிராத்தனை நிகழ்வும், பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சிறுவர் பராமரிப்பு, மற்றும் சமூகசேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மது நஸீர்; பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, சுகாதார அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் யூ.எம்.வாஹிட், பொது மக்கள் தொடர்பு அதிகாரி எம்.ஐ.எம்.நயீம், அம்பாரைக் கச்சேரி திட்டமிடல'; பணிப்பாளர் எம்.ஐ.தௌபீக், சங்கைக்குரிய உலமாக்கள், ஊர்ப்பிரமுகர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நல்லாட்சிக்கும், நல்லாட்சி நாயகர்களுக்ளும், நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி இடம் பெற்ற விசேட துஆப் பிரார்த்தனையைத் தொடர்ந்து, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் விவசாயத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான உபகரணங்கள் பலவும் வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மது நஸீர்; இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- ' இந்த நல்லாட்சி அரசின் மீதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதும், பிரதமர் ரணில் மீதும் இந்நாட்டில் வாழும் மூவின மக்களும் நம்பிக்கை வைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நம்பிக்கை எதிர்வரும் காலங்களிலும் வீண்போகா வண்ணம் அரசைப் பாதுகாப்பது ஜனாதிபதி, பிரதமர், அரசின் முக்கிய அமைச்சாகள்;, அதிகாரிகளின் கடமையாகும்' எனத் தெரிவித்தார்.
Post a Comment