நிந்தவூரில் அமைந்துள்ள மின்நிலையத்தை அகற்றக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்.

       
-மூன்று பள்ளிவாசல்களும், மூன்று கிராம அபிவிருத்திச் சங்கங்களும் களத்தில்-
                       ( .எல்..றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூரில் அமைந்துள்ள 'நெல் உமியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும்' மின்நிலையத்தை  உடன் நிறுத்துமாறு  கோரி இன்று(30) பொது மக்கள் பெரும்; ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.

இன்று }ம்ஆத் தொழுகையின் பின்னர் நிந்தவூர் ஜூம்ஆப்பள்ளிவாசலில் கூடிய பொது மக்கள் சுலோகங்களை ஏந்தியவாறு பிரதான வீதிவழியே பிரதேச செயலகம் சென்று, பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீலிடம் மகஜர் கையளித்தனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் பிரதான வீதி வழியே திரும்பி பிரதேச சபையிலுள்ள உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சுவானந்திடமும் மகஜர் கையளித்தனர்.

மேற்படி மின்நிலையத்தின் செயற்பாடுகளால் பின்வரும் பிரச்சினைகள் தோன்றியிருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
01.          வெளியிடப்படும் அதிக புகையுடன் கூடிய சாம்பலால் சரும நோய்களும், ஆஸ்த்மா போன்ற நோய்களும் உருவாவதோடு பாடசாலை மாணவர்களும் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர்.
02.          நிலத்தடி நீர் குறைவதாலும், நீர் மாசடைவதாலும் குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்படுவதோடு, மக்களது அன்றாட வாழ்வு பாதிக்கப்படுகிறது.
03.          பாதுகாப்பற்ற உமிக் களஞ்சியத்தால் கண்பார்வைக் கோளாறுகள், சுவாசம் சம்பந்தமான நோய்கள் தோன்றுகின்றன.
04.          அதிர்வும், அதிக இரைச்சலுடன் கூடிய சத்தத்தினாலும் நிம்மதியான தூக்கமின்மை, சிறார்களின் மனநிலை பாதிக்கப்படுகின்றது.
05.          முறையற்ற கழிவுநீர் வெளியேற்றத்தினால் மீன்பிடி பாதிப்பும், வயல் நிலங்கள் பாதிப்புக்குள்ளாகி விளைச்சல் குறைந்துள்ளது. போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே மேற்படி அமைதியான ஆர்ப்பாட்டப் பேரணியை பொது மக்கள் நடாத்தினர்.
நிந்தவூர் பிரதேச சபை, நிந்தவூர் பிரதேச செயலகம் போன்றவற்றிற்கு சம்மாந்துறைப் பொலிசார் பாதுகாப்பு வழங்கியதோடு, ஆர்ப்பாட்டக்காரர்கள் அறுவரைத் தவிர ஏனையோரை செயலகங்களுக்குள் நுழைய அனுமதிக்காமல் வெளியே தடுத்து நிறுத்தினர்.

இப்பேரணியில் ஆண்கள் மாத்திரமன்றி, பெண்களும், சிறுவர்களும், கைக்குழந்தைகளைத் தாங்கிய பெண்களும் சுட்டெரித்த சூரியனைக் கூடப் பொருட்படுத்தாது பெரும் ஆக்ரோசத்துடன் பங்கு கொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது.

மஸ்ஜிதுல் ஹூதா ஜூம்ஆப்பள்ளி, பாக்கியத்துஸ் ஸாலியா, மஸ்ஜிதுல் மர்ஜான் ஆகிய பள்ளிவாசல்களும், நிந்தவூர்-09, 22, 23ம் கிராம அபிவிருத்திச் சங்கங்களும் கூட்டாக இணைந்தே மேற்படி அமைதிப்பேரணிக்கான அழைப்பை விடுத்திருந்தனர்.














Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.